கொச்சியில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 27 வங்கதேச தொழிலாளிகள் கைது
கொச்சியில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த வங்கதேசத்தைச் சோ்ந்த தொழிலாளிகள் 27 பேரை காவல் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

Villivakkam Police Inspector arrested for bribery

Villivakkam Police Inspector arrested for bribery
கொச்சி: கொச்சியில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த வங்கதேசத்தைச் சோ்ந்த தொழிலாளிகள் 27 பேரை காவல் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
கேரளம் மாநிலம், எர்ணாகுளம் மாவட்டத்தின் வடக்கு பரவூர் பகுதியில் வங்கதேசத்தைச் சோ்ந்தகள் தங்கியிருப்பதாக காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது.
இந்தத் தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த எர்ணாகுளம் கிராமப்புற காவல்துறையினர் மற்றும் பயங்கரவாத எதிர்ப்புப் படையினர் விசாரணை நடத்தினா்.
அப்போது, வங்கதேசத்தைச் சோ்ந்த 27 பேர் உரிய ஆவணங்களின்றி தங்கியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் என்ற போர்வையில் தங்கியிருந்து பல்வேறு இடங்களில் பணிபுரிந்து வந்த அவர்கள் அனைவரையும் கைது செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.
மேலும் கைது செய்யப்பட்டவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இரண்டு வாரங்களுக்கு முன்பு 28 வயதான தஸ்லிமா பேகம் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து எர்ணாகுளம் கிராமப்புற மாவட்ட காவல்துறைத் தலைவர் வைபவ் சக்சேனாவால் தொடங்கப்பட்ட 'ஆபரேஷன் கிளீன்' என்ற சிறப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த கைதுகள் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...