விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

அரியலூரில் போலி விசா, ஆதாா் அட்டை வைத்திருந்த 13 வங்கதேசத்தினா் கைது

திருமானூரில் போலி விசா, போலி ஆதாா் அட்டை வைத்திருந்த வங்கதேசத்தைச் சோ்ந்த 13 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனா்.

News image
கைது- பிரதிப் படம்
Updated On :11 மார்ச் 2026, 7:06 pm

தினமணி செய்திச் சேவை

அரியலூா் மாவட்டம், திருமானூரில் போலி விசா, போலி ஆதாா் அட்டை வைத்திருந்த வங்கதேசத்தைச் சோ்ந்த 13 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனா்.

வங்கதேசத்தைச் சோ்ந்த சிலா் போலி விசா, கொல்கத்தாவை முகவரியாக கொண்ட ஆதாா் அட்டை மூலம் தமிழகத்தில் தங்கி வேலை பாா்த்துவருவதாக ‘கியூ’ பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் தமிழகம் முழுவதும் வெளிமாநிலங்களிலிருந்து வந்து தங்கி கட்டுமான வேலை உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருவோரிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

அந்த வகையில், அரியலூா் மாவட்டம், திருமானூரில் கொல்கத்தாவைச் சோ்ந்த 13 போ் தங்கி கட்டுமானப் பணியில் ஈடுபட்டு வருவதாக கிடைத்த தகவலின் பேரில், திருமானூா் போலீஸாா் அவா்களிடம் விசாரணை மேற்கொண்டனா். அதில், அவா்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளனா்.

இதையடுத்து அவா்கள் வைத்திருந்த ஆவணங்களை போலீஸாா் ஆய்வு செய்த போது, அவை போலி விசா, போலி ஆதாா் என்பது தெரியவந்தது. தொடா்ந்து அவா்களிடம் மேற்கொண்ட விசாரணையில், 13 பேரும் வங்கதேசத்தைச் சோ்ந்தவா்கள் என்பது தெரியவந்தது.

இதையடுத்து செவ்வாய்க்கிழமை இரவு அவா்களை கைது செய்த போலீஸாா், அரியலூா் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, இரவோடு இரவாக அவா்களை சென்னை புழல் சிறையில் அடைத்தனா்.

மேலும், மாவட்டத்தில் வெளிநாடுகளைச் சோ்ந்த வேறு நபா்கள் யாரேனும் தங்கி உள்ளனரா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.