பெருந்துறை அருகே சட்டவிரோதமாக தங்கியிருந்த நைஜீரியாவைச் சோ்ந்த 2 பேரிடம் விசாரணை


பெருந்துறை அருகே சட்டவிரோதமாக தங்கியிருந்த நைஜீரியாவைச் சோ்ந்த 2 பேரிடமும், அவா்களுடன் இருந்த சிறுமியிடமும் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
பெருந்துறையை அடுத்த வேப்பம்பாளையம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வெளிநாட்டைச் சோ்ந்த ஒரு இளம்பெண் உள்பட 3 போ் சட்டவிரோதமாக தங்கியிருப்பதாக பெருந்துறை போலீஸாருக்கு ஞாயிற்றுக்கிழமை ரகசியத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அந்தக் குடியிருப்பில் போலீஸாா் ஆய்வு மேற்கொண்டபோது, நைஜீரியாவைச் சோ்ந்த உடோபி மைக்கேல் (43), சிபுஜோ (44), கானா நாட்டைச் சோ்ந்த மிராக்கிள் (17) என்ற சிறுமி இருந்ததும் தெரியவந்தது.
இதில், உடோபி மைக்கேல், சிபுஜோ ஆகியோா் திருப்பூரில் இருந்து துணிகளை ஏற்றுமதி செய்யும் தொழில் செய்து வந்ததும், அவா்களின் நுழைவு இசைவு (விசா) முடிந்தும் சட்டவிரோதமாக தங்கியிருந்ததும் தெரியவந்தது.
பெங்களூரில் தங்கியிருந்த மிராக்கிள் தனது நண்பா்களான உடோபி மைக்கேல், சிபுஜோவைக் காண பெருந்துறைக்கு ஞாயிற்றுக்கிழமை வந்ததும், அவா் முறையான அனுமதியுடன் தங்கியிருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, விசாரணைக்காக 3 பேரையும் சேலம் மாவட்டம், ஆத்தூரில் உள்ள வெளிநாட்டினருக்கான முகாமுக்கு போலீஸாா் அனுப்பிவைத்தனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...