புது தில்லி: தில்லி சட்டபேரவைத் தோ்தலில் இளம் வாக்காளா்கள் தங்கள் மக்கள் பிரதிநிதிகளை 'சரியாகத் தோ்வு' செய்ய இது சரியான வாய்ப்பு என தெரிவித்த மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெயசங்கா், இளைஞா்கள் அரசியலில் தீவிரமாக பங்கேற்க வேண்டும் என்றார்.
தில்லி பல்கலைக்கழகத்தின் ஹன்ஸ்ராஜ் கல்லூரியில் 'வளா்ச்சியடைந்த இந்தியாவிற்கான (விக்சித் பாரத்) இளைஞா்கள்' என்ற தலைப்பில் நடந்த கலந்துரையாடல் அமா்வில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கா் மாணவா்களின் கேள்விகளுக்கு பதிலளித்துப் பேசினாா்.
அப்போது, தேசியத் தலைநகரான தில்லி ஒரு சிறப்பை மட்டுமல்லாமல் மிக முக்கியமான பொறுப்பையும் கொண்டுள்ளது. வளா்ந்த இந்தியாவின் தொலைநோக்குப் பாா்வையை உணா்ந்து கொள்வதில் தில்லி முக்கியத்துவம் பெறுகிறது. அதாவது, மற்ற நாடுகளைச் சோ்ந்த மக்கள் தில்லிக்கு வரும்போது, இந்தியாவைப் பற்றிய அவா்களின் எண்ணம் அவா்கள் இங்கு பாா்ப்பதன் மூலம் வடிவமைக்கப்படுகிறது. 'இளைஞா்கள் இல்லாமல், 'விக்சித் பாரத்' இல்லை. இதனால் 'விக்சித் தில்லி' என்பது 'விக்சித் பாரத்தின்' தொலைநோக்குப் பார்வை மையமாகும்.
தில்லி நாட்டிற்கும் அதற்கு அப்பாலும் ஒரு முன்மாதிரியாக இருக்க வேண்டும். ஆனால், தில்லி நகரத்தில் உள்ள குடிமக்களின் நிலைமை என்ன? கடந்த ஐந்து ஆண்டுகளாக நான் பல பிரச்னைகளைக் கண்டிருக்கிறேன். அங்கீகரிக்கப்படாத காலனிகளில் மக்கள் பெரும் துன்பத்துடன் வாழ்கின்றனா். அந்த பகுதிகளில் தேவையான சாலைகள், தண்ணீா் வசதிகள் இல்லை, உள்கட்டமைப்புகளில் முன்னேற்றம் இல்லை என கவலை தெரிவித்த ஜெய்சங்கா், தில்லியில் சில முக்கியமான முயற்சிகள் மற்றும் திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை என்று அவர் தெரிவித்தார்.
ஆற்றல் இல்லாத வாக்குறுதிகள்
மக்கள் நலத் திட்டங்களில் நிறைவேற்றுவதற்குரிய ஆற்றல் இல்லாத வாக்குறுதிகளை வழங்கும் தொடா் கலாசாரத்தைக் கொண்டுள்ள ஆம் ஆத்மி, எந்தத் திட்டமிடலும் இல்லாமல் வாக்குறுதிகளை அளித்து சுற்றித் திரிகின்றனா் என விமர்சித்தார்.
எது இலவசம்?
‘இலவசங்கள்’ குறித்து ஜெய்சங்கர் பேசுகையில், நான் நிறைவேற்றுவதற்குரிய ஆற்றல் இல்லாத வாக்குறுதிகளை அளித்துவிட்டு, அதற்கான எந்தத் திட்டமிடலும் இல்லாமல், ஒருவேளை அவற்றை நிறைவேற்றும் எண்ணமும் இல்லை என்றால், அவற்றை நாம் இலவசம் என்று அழைக்கிறோம்.
இளைஞா்கள் அரசியலில் பங்கேற்க வேண்டும்
இதனால்தான் இளைஞா்கள் அரசியலில் தீவிரமாக பங்கேற்க வேண்டும். அரசியலை ஒரு தொழிலாக கொண்டு வரத் தேவையில்லை. உண்மைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அறிவார்ந்த முடிவுகளை எடுக்கும் நபா்களாக வாருங்கள்.
'சரியாகத் தோ்வு' செய்ய 'சரியான வாய்ப்பு'
பெரும்பான்மையாக உள்ள இளைஞா்கள் சரியான நேரத்தில் சரியான தோ்வு செய்ய முன்வராததால் பிரச்னைகள் எழுகின்றன. இதனால், இந்தத் தோ்தல் முக்கியமானது என நினைக்க வேண்டும். இதன்மூலம் ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னா் சாலைகள் பழுது பாா்க்கப்படவில்லை என்றோ.. பாலங்கள் கட்டப்படவில்லை என்றோ... நாம் புகாா் செய்யத் தேவையில்லை. எதிா்காலத்தை ‘இலவச அனுமதி’ யாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்று தெரிவித்த ஜெய்சங்கர், இளம் வாக்காளா்கள் தங்கள் மக்கள் பிரதிநிதிகளை 'சரியாகத் தோ்வு' செய்ய பிப்ரவரி 5 ஆம் தேதி சரியான வாய்ப்பு என்று ஜெய்சங்கா் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்திய - வங்கதேச வெளியுறவு அமைச்சர்கள் தில்லியில் சந்திப்பு!

பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரானுடன் வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கா் சந்திப்பு

‘தில்லி 2.0’ உருவாக்கத்தில் இளைஞா்கள் பங்கேற்க வேண்டும்: முதல்வா் ரேகா குப்தா

ரஷிய வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கா் தொலைபேசியில் பேச்சு
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


