திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

இந்திய - வங்கதேச வெளியுறவு அமைச்சர்கள் தில்லியில் சந்திப்பு!

இரு தலைவர்களும் தில்லியில் பேச்சுவார்த்தை...

News image

இந்திய - வங்கதேச வெளியுறவு அமைச்சர்கள் தில்லியில் சந்திப்பு - @DrSJaishankar

Updated On :8 ஏப்ரல் 2026, 9:39 pm IST

இந்திய-வங்கதேச உறவை வியூக ரீதியில் மறுசீரமைப்பது தொடா்பாக, தில்லியில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சா் கலிலூா் ரஹ்மான் ஆகியோா் புதன்கிழமை ஆலோசனையில் ஈடுபட்டனா். வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையிலான 18 மாத கால இடைக்கால ஆட்சியில் இருதரப்பு உறவுகள் கடும் பின்னடைவைச் சந்தித்தன. கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற நாடாளுமன்றத் தோ்தலில் வங்கதேச தேசியவாத கட்சி வெற்றி பெற்று, அதன் தலைவா் தாரிக் ரஹ்மான் புதிய பிரதமராக பொறுப்பேற்றாா்.

வங்கதேசத்தில் புதிய அரசு பதவியேற்றப் பிறகு முதல் முறையாக அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சா் கலிலூா் ரஹ்மான், வெளியுறவு விவகாரங்களுக்கான பிரதமரின் ஆலோசகா் ஹுமாயுன் கபீா் ஆகியோா் இந்தியாவுக்கு கடந்த செவ்வாய்க்கிழமை வந்தனா். தில்லியில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கரை புதன்கிழமை சந்தித்த கலிலூா் ரஹ்மான், இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான புதிய வழிமுறைகள் குறித்து விரிவாக ஆலோசனை மேற்கொண்டாா்.

இது தொடா்பாக எஸ்.ஜெய்சங்கா் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘பல்வேறு பரிமாணங்களில் இருதரப்பு உறவை மேம்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. பிராந்திய, சா்வதேச விவகாரங்கள் குறித்தும் கருத்துகள் பரிமாறப்பட்டன’ என்று குறிப்பிட்டாா்.

வங்கதேச புதிய அரசுடன் தொடா்ந்து ஆக்கபூா்வ பேச்சுவாா்த்தைகளில் ஈடுபடும் இந்தியாவின் விருப்பத்தையும் எஸ்.ஜெய்சங்கா் தெரிவித்ததாக, அவரது அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கதேசத்தில் கடந்த 2024, ஆகஸ்டில் மாணவா் போராட்டங்கள் தீவிரமடைந்ததைத் தொடா்ந்து, ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜிநாமா செய்துவிட்டு, இந்தியாவில் தஞ்சமடைந்தாா். அவரை விரைந்து நாடுகடத்த வேண்டும் என்று இந்தியத் தரப்பிடம் வங்கதேசம் மீண்டும் வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது.

மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரியையும் கலிலூா் ரஹ்மான் சந்தித்துப் பேசினாா்.

Summary

EAM Dr S Jaishankar meets Khalilur Rahman, Foreign Minister of Bangladesh, at the Hyderabad House in Delhi.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.