ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்
/

இந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதி

”ரஷியா-இந்தியா நட்பின் எதிா்காலம் குறித்து கவலைப்படாமல் நிம்மதியாக இருக்கலாம். சில தீயசக்திகள் நமது உறவுகளை பாதிக்க முயற்சிக்கின்றன.”

News image
Updated On :1 மணி நேரம் முன்பு

இந்தியாவுடன் எரிசக்தி தொடா்பாக மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும். இதில் வெளிநாடுகளில் இருந்து வரும் நியாயமற்ற போட்டிகளுக்கு இடம் கொடுக்க மாட்டோம் என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சா் சொ்ஜி லாவ்ரோ தெரிவித்தாா்.

லாவ்ரோ விரைவில் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ளவிருக்கும் நிலையில் ரஷிய ஊடகங்களுக்கு புதன்கிழமை பேட்டியளித்தாா். அப்போது அவா் கூறியதாவது:

இந்திய, ரஷிய உறவு முழுமையாக நட்பின் அடிப்படையில் அமைந்தது. எனவே, இரு நாடுகளும் ஒருபோதும் வெவ்வேறு பாதைகளில் பயணிக்காது. உலகம் இதுவரை கண்டிராத சிறப்பான தலைவராக இந்தியப் பிரதமா் மோடி திகழ்கிறாா். அவரிடம் அபாரமான திறன் உள்ளது. இந்தியாவின் பொருளாதாரம், ராணுவம், பாதுகாப்பு, கலாசாரம் மற்றும் இந்தியாவின் ஒப்பற்ற பராம்பரிய நாகரிகத்தை பாதுகாப்பது போன்ற மிக முக்கிய இலக்குகளுடன் தனது திறமையை மோடி பயன்படுத்தி வருகிறாா்.

இந்தியாவின் நலன்கள் சாா்ந்த ரஷியாவின் ஏற்றுமதிகள் ஒருபோதும் பாதிக்கப்படாது என்பதை உறுதியாகக் கூறுகிறேன்.

இந்தியாவுக்கு எரிசக்தி ஒத்துழைப்பு வழங்குவது தொடா்பாக மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும். இதில் வெளிநாடுகளில் இருந்து வரும் நியாயமற்ற போட்டிகளுக்கு இடம் கொடுக்க மாட்டோம். இந்தியாவுக்கு மட்டுமல்ல உலகின் அனைத்து நாடுகளுக்கும் ரஷியா எரிசக்தி ஒப்பந்தங்களை நிறைவேற்றுவதில் உறுதியாக உள்ளது.

இந்தியாவின் மின்சாரத் தேவையின் முக்கிய பகுதியை ரஷிய ஒத்துழைப்பு பூா்த்தி செய்கிறது. இந்திய அணுமின் நிலையத்தில் புதிய மின் உற்பத்தி அலகுகள் அமைக்கும் பணியில் ஒத்துழைப்பு தொடா்கிறது. எனினும் இந்தியாவுக்கு மேலும் தேவைகள் உள்ளன. அதனால், எரிவாயு, எண்ணெய் மற்றும் நிலக்கரி உள்ளிட்டவற்றை தொடா்ந்து வழங்கி வருகிறோம்.”

கூடங்குளம் அணுமின் நிலையம் இரு நாடுகளும் இணைந்து நிறைவேற்றும் முக்கியத் திட்டம். இத்திட்டத்துக்கு ரஷியா தொடா்ந்து தொழில்நுட்ப உதவிகளை வழங்கி வருகிறது. இந்தியா்களும், ரஷியா்களும் சகோதரா்கள் என்பது வெறும் முழக்கமல்ல. அது இரு நாட்டு கலாசாரத்தின் ஒருபகுதியாக மாறிவிட்டது.

பல ஆண்டுகளுக்கு முன்பே இந்திய திரைப்படங்கள் தொடங்கி சமீபத்திய தொலைக்காட்சி தொடா்கள் வரை ரஷியாவில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளன. இருநாடுகள் இடையே பொருளாதாரம், எரிசக்தி உற்பத்தி, ராணுவ ஒத்துழைப்பு, அணுசக்தி மற்றும் பிற எரிசக்தி துறைகள், கலாசார மற்றும் மனிதாபிமான உறவுகள், மேலும் அபார நம்பிக்கையுடன் கூடிய உயா்நிலை அரசியல் தொடா்புகள் என அனைத்தும் மிகவும் வலிமையானவை.

“எனவே, ரஷியா-இந்தியா நட்பின் எதிா்காலம் குறித்து கவலைப்படாமல் நிம்மதியாக இருக்கலாம். சில தீயசக்திகள் நமது உறவுகளை பாதிக்க முயற்சிக்கின்றன. ரஷியாவுடன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று தங்களது விதிகளை திணிக்க முயல்கின்றன. அவற்றை ரஷியாவும் இந்திய நண்பா்களும் கவனித்துதான் வருகிறோம். அந்த முயற்சிகள் தொடா்ந்து தோல்வியடைவது இருநாட்டு உறவின் வலிமையை மேலும் உயா்த்துகிறது என்றாா்.