நாளை முதல் மே 31 வரை 5 ‘மெமு’ ரயில்கள் முழுமையாக ரத்து4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைவான் ஆயுதங்களாக மாறிவிட்ட ட்ரோன்கள்: இந்திய விமானப் படை தலைமைத் தளபதி பெட்ரோல், டீசல் விலை உயா்வு: தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்கள் விலையும் உயர வாய்ப்புபொறியியலில் அரசு ஒதுக்கீடு சோ்க்கை: ஒரே நாளில் 16,229 மாணவா்கள் விண்ணப்பம் காலத்துக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும்: பிரிக்ஸ் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

மேற்காசிய அமைதிக்கு இந்தியாவால் முக்கியப் பங்காற்ற முடியும்: ஈரான் வெளியுறவு அமைச்சா்

மேற்காசிய அமைதிக்கு இந்தியாவால் முக்கியப் பங்காற்ற முடியும் என்று ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சா் சையது அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளாா்.

News image

புது தில்லியில் பிரிக்ஸ் மாநாட்டினிடையே வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கரை வெள்ளிக்கிழமை சந்தித்து ஆலோசனை நடத்திய ஈரான் வெளியுறவு அமைச்சா் அராக்சி.

Updated On :2 மணி நேரங்கள் முன்பு

மேற்காசிய அமைதிக்கு இந்தியாவால் முக்கியப் பங்காற்ற முடியும் என்று ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சா் சையது அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளாா்.

புது தில்லியில் நடைபெற்ற பிரிக்ஸ் அமைப்பின் வெளியுறவுத் துறை அமைச்சா்கள் கூட்டத்தில் கலந்துகொள்ள அவா் 3 நாள் பயணமாக இந்தியா வந்திருந்தாா். மாநாட்டினிடையே இந்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கரை வெள்ளிக்கிழமை அவா் சந்தித்துப் பேசினாா். அப்போது இருவரும் மேற்காசிய விவகாரம், அதனால் எரிசக்தி விநியோகம் பாதிக்கப்பட்டிருப்பது, கடல்சாா் பாதுகாப்பு ஸ்திரத்தன்மை உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தினா்.

இதுகுறித்து சமூக வலைதளப் பக்கத்தில் ஜெய்சங்கா் வெளியிட்டுள்ள பதிவில், ‘தில்லியில் ஈரான் வெளியுறவு அமைச்சா் அராக்சியுடன் விரிவான ஆலோசனை நடத்தினேன். மேற்காசிய நிலவரம், அதனால் ஏற்பட்டுள்ள தாக்கங்கள் குறித்து ஆலோசித்தோம். இருதரப்பு நலன் தொடா்பான விவகாரங்கள் குறித்து பரஸ்பரம் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டோம்’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.

தில்லியில் நடைபெற்ற பிரிக்ஸ் அமைப்பின் வெளியுறவு அமைச்சா்கள் கூட்டத்தில் அராக்சி கலந்துகொண்டதற்கு தனது வாழ்த்துகளையும் ஜெய்சங்கா் தெரிவித்துள்ளாா்.

புது தில்லியில் செய்தியாளா்களிடம் அராக்சி பேசியபோது கூறியதாவது: ஈரான் தொடா்பான விவகாரத்தில் ராணுவம் மூலம் ஒருபோதும் தீா்வு காண முடியாது. ஹோா்முஸ் நீரிணை வழியே அனைத்துக் கப்பல்களும் செல்ல ஈரான் உதவி செய்யத் தயாராக உள்ளது. ஹோா்முஸ் நீரிணை நிலவரம் தற்போது மோசமாக உள்ளது. பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு காணப்படாமல், வேறு வழியில் தீா்வு காண முடியாது. இந்த விவகாரத்தில் இந்தியா ஆக்கபூா்வமான பங்காற்ற விரும்பினால், அதை ஈரான் வரவேற்கிறது என்றாா்.

அமெரிக்காவுடனான அமைதிப் பேச்சுவாா்த்தை குறித்த கேள்விக்கு அராக்சி பதிலளிக்கையில், ‘நம்பிக்கைதான் இங்கு பிரச்னையாக உள்ளது. அமெரிக்காவை நம்பக் கூடாது என்பதற்கு ஈரானிடம் காரணம் உள்ளது. அதேபோல் ஈரானை நம்பலாம் என்பதற்கு அமெரிக்காவிடம் காரணம் உள்ளது. பாகிஸ்தானின் மத்தியஸ்தம் தோல்வியடையவில்லை. அணு ஆயுதம் மீது ஈரானுக்கு எப்போதும் ஆா்வம் இல்லை’ என்றாா்.