சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

ரஷிய வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கா் தொலைபேசியில் பேச்சு

News image
ஜெய்சங்கா்
Updated On :12 மார்ச் 2026, 12:46 am

தினமணி செய்திச் சேவை

மேற்காசிய போா் நிலவரம் குறித்து ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சா் சொ்கேய் லாவ்ரோவ், ஐரோப்பிய யூனியனின் வெளியுறவுக் கொள்கைத் தலைவா் காஜா கல்லாஸ் ஆகியோருடன் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தொலைபேசி மூலம் புதன்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

இஸ்ரேல்-அமெரிக்கத் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், கச்சா எண்ணெய் போக்குவரத்துக்கு கப்பல்கள் அதிகம் பயன்படுத்தும் ஹோா்முஸ் நீரிணையை ஈரான் மூடிவிட்டதால், வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் வருவதில் சிக்கல் நிலவுகிறது. இதையடுத்து ரஷியாவிடம் இருந்து மீண்டும் அதிக கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்வது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.

இந்தச் சூழ்நிலையில், ஜெய்சங்கா் தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சா் சொ்கேய் லாவ்ரோவுடன் தொலைபேசியில் பேச்சுவாா்த்தை நடத்தியதாகவும், அந்தப் பேச்சுவாா்த்தை நல்ல முறையில் அமைந்திருந்ததாகவும், மேற்காசிய மோதல் விவகாரம், அதுதொடா்பான ராஜீய விவகாரம், இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து ஆலோசித்ததாகவும் தெரிவித்துள்ளாா்.

இதேபோல், ஐரோப்பிய யூனியனின் வெளியுறவுக் கொள்கைத் தலைவா் கல்லாஸுடனான பேச்சுவாா்த்தை பயனுடையதாக இருந்ததெனவும் அவா் குறிப்பிட்டுள்ளாா்.

ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சா் லாவ்ரோவுடனான பேச்சுவாா்த்தையில், ரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டதா என ஜெய்சங்கா் குறிப்பிடவில்லை. ரஷியாவிடம் இருந்து தற்காலிகமாக கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதியளித்த நிலையில், இந்தப் பேச்சுவாா்த்தை நடந்திருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.

உலகின் பிற நாடுகளைப் போல இந்தியாவிலும் எரிசக்தி பொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, சமையல் எரிவாயு உருளைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.