கோப்புப் படம்
கோப்புப் படம்

இளைஞரின் திருமணத்தை நிறுத்த மணப்பெண்ணுக்கு விஷம் கொடுத்த பெண் கைது!

ஒடிசாவில் இளைஞரின் திருமணத்தை நிறுத்த மணப்பெண்ணுக்கு விஷம் கொடுத்த பெண் கைது செய்யப்பட்டதைப் பற்றி...
Published on

ஒடிசா மாநிலம் கேந்திராப்பரா மாவட்டத்தில் இளைஞரின் திருமணத்தை நிறுத்துவதற்காக மணப்பெண்ணுக்கு விஷம் கலந்த பானத்தைக் கொடுத்த 37 வயது பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

பட்டமுண்டாய் காவல் நிலையக் கட்டுப்பாட்டிலுள்ள தமராப்பூர் கிராமத்தைச் சேர்ந்த முன்னி பீபி (வயது 37) எனும் பெண், 29 வயதுடைய இளைஞருடன் கடந்த 2 ஆண்டுகளாக தகாத உறவில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், அந்த இளைஞருக்கு அதே பகுதியைச் சேர்ந்த 23 வயது பெண்ணுடன் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால், ஆத்திரமடைந்த முன்னி பீபி அந்த இளம்பெண்ணைக் கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, அந்த இளம்பெண்ணின் திருமண நிச்சியதார்த்த நிகழ்ச்சி அந்த இளைஞரின் வீட்டில் நடைபெற்றுள்ளது. அப்போது, வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்னை காண சென்ற முன்னி பீபி அவருக்கு பூச்சி மருந்து கலந்த குளிர் பானத்தை கொடுத்துள்ளார். அதை குடித்த இளம்பெண்ணுக்கு வாந்தியும் மயக்கமும் ஏற்பட்டு உடல் நிலை மோசமாகியுள்ளது.

இதையும் படிக்க: நீதி விசாரணைக் குழு பிராயாக்ராஜில் ஆய்வு!

இதையறிந்த கிராமவாசிகள் உடனடியாக அந்த பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக பட்டாமுண்டாயிலுள்ள சுகாதார நிலையத்தில் சேர்த்துள்ளனர். அங்கு அவரது நிலை தொடர்ந்து மோசமானதினால் அவர் கேந்திராப்பரா அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து, தகவலறிந்த காவல் துறையினர் முன்னி பீபியை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அந்த இளம்பெண்ணின் வீட்டின் அருகே கிடந்த பூச்சி மருந்து பாட்டிலையும் ஆதாரமாக சேகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com