முதல்வரா இருந்தாலும் சன்னியாசி முன்னாடி தரையிலதான் உட்காரனும்: அண்ணாமலை
கோவை: முதல்வரா இருந்தாலும் சன்னியாசி முன்னாடி தரையிலதான் உட்காரனும் என்ற தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, விரைவில் ஆன்மீகம் கலந்த அரசு அமையும் என்றார்.
கோவை காமாட்சிபுரி ஆதினத்தில் குரு பௌர்ணமியை முன்னிட்டு ஆன்மீக புத்தகம் வெளியீட்டு விழா மற்றும் சமூக சேவையில் சிறந்த விளங்குபவர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பங்கேற்றார். முன்னதாக சிறப்பு யாக பூஜையில் கலந்து கொண்ட அண்ணாமலை சாமி தரிசனம் செய்து, மரக்கன்று நட்டு வைத்தார்.
அதன் பிறகு விருத்தாளர்களுக்கு விருதுகளை வழங்கி அண்ணாமலை பேசுகையில், ஒரு நாட்டிற்கு ராஜாவாகவே இருந்தாலும், அது முதல்வராகவே இருந்தாலும் ஒரு சன்னியாசி முன்னாள் தரையில்தான் அமர வேண்டும். அதுபோல தமிழகத்தில் விரைவில் ஒரு ஆன்மீகம் கலந்த ஆட்சி அமையும் என்றும் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் ஆர்.வி.எஸ் கல்வி குழுமங்களின் நிறுவனர் குப்புசாமி, பாஜக மாநில விவசாயிகள் அணி தலைவர் நாகராஜ் மற்றும் ஏராளமான ஆன்மீக பெரியோர்களும், பக்தர்களும் கலந்து கொண்டனர்.
Former Tamil Nadu BJP leader Annamalai, who said that even if he is the CM, he will sit on the floor in front of a sannyasi, said that a spiritually imbued government will soon be formed.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.