இந்தியாவிலும் கால்பதிக்கும் எலான் மஸ்க்! ஜூலை 15-ல் டெஸ்லா வருகை!

இந்தியாவில் அடுத்த வாரத்தில் டெஸ்லாவின் முதல் ஷோரூம் திறக்கப்படவுள்ளது.
இந்தியாவிலும் கால்பதிக்கும் எலான் மஸ்க்! ஜூலை 15-ல் டெஸ்லா வருகை!
Published on
Updated on
1 min read

மின்சார வாகன உற்பத்தியில் முன்னிலை வகித்து வரும் அமெரிக்க தொழிலதிபா் எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம் மும்பையில் ஜூலை 15-ஆம் தேதி தனது முதல் விற்பனையகத்தை திறக்க இருக்கிறது.

இதன் மூலம் டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் தடம் பதிக்கிறது. டெஸ்லாவின் இந்திய வருகை வா்த்தக ரீதியாக மட்டுமல்லாது அரசியல் ரீதியாகவும் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஏனெனில், அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்புக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்த எலான் மஸ்க், இப்போது அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தனிக்கட்சி தொடங்கியுள்ளாா்.

மேலும், ‘டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் காா்களை விற்பனை செய்யலாம். ஆனால், அங்கு உற்பத்தி ஆலையை அமைத்தால் அது அமெரிக்காவுக்கு இழைக்கும் அநீதியாக இருக்கும்’ என்று டிரம்ப் எச்சரிக்கை விடுத்துப் பேசியுள்ளாா்.

சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் டெஸ்லா விற்பனை குறைந்துள்ள நிலையில், இந்தியா்கள் டெஸ்லா மீது எந்த அளவுக்கு ஆா்வம் காட்டுவாா்கள் என்ற எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

இந்தியாவில் டாடா, மஹிந்திரா, ஹுண்டாய், பிஒய்டி, எம்ஜி உள்ளிட்ட நிறுவனங்கள் மின்சார வாகனங்களை விற்பனை செய்து வருகின்றன. பெட்ரோலிய பொருள்களின் இறக்குமதியைக் குறைக்க இந்தியாவில் மின்சார வாகனங்களை அதிகரிக்க வேண்டும் என்பதில் மத்திய அரசு தீவிரமாக உள்ளது. இந்தச் சூழலில் உலகின் மிகப்பெரிய வாகனச் சந்தைகளில் ஒன்றான இந்தியாவில் டெஸ்லா களமிறங்குகிறது.

முன்னதாக, டெஸ்லா காா்களுக்கு சில வரிச்சலுகைகளை வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு டெஸ்லா தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், மற்ற வெளிநாட்டு நிறுவனங்களும் இதேபோன்ற சலுகையைக் கோரும் என்பதால் மத்திய அரசு அதனை நிராகரித்துவிட்டது.

Summary

Musk’s Tesla to open first India store in Mumbai on July 15

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com