அதிகாரம் யாரிடம்? 3-வது இடத்தில் அமெரிக்கா! எலான் மஸ்க் கருத்தால் குழப்பம்!

உலகளவில் அதிகாரத்தின் சமநிலை மாறிவருவதாக எலான் மஸ்க் கூறியிருப்பது சமூக ஊடகங்களில் பேசுபொருளாகியுள்ளது.
இந்தியா - சீனா - அமெரிக்கா
இந்தியா - சீனா - அமெரிக்காசித்திரிப்பு
Updated on
1 min read

உலகளவில் அதிகாரத்தின் சமநிலை மாறிவருவதாக எலான் மஸ்க் கூறியிருப்பது சமூக ஊடகங்களில் பேசுபொருளாகியுள்ளது.

உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் முக்கிய பங்காற்றுபவர்களாக சீனா (26.6%) முதலிடத்தில் இருப்பதாக சமீபத்திய ஆய்வறிக்கை (World of Stastics - வேர்ல்ட் ஆஃப் ஸ்டாஸ்டிக்ஸ்) கூறுகிறது. தொடர்ந்து, இரண்டாவது இடத்தில் இந்தியாவும் (17.0%), மூன்றாவது இடத்தில் அமெரிக்காவும் (9.9%) உள்ளன.

இவர்களுக்கு அடுத்தபடியாக, இந்தோனேசியா (3.8%), துருக்கி (2.2%), சௌதி அரேபியா (1.7%), வியத்நாம் (1.6%), நைஜீரியா (1.5%), பிரேசில் (1.5%), gஜெர்மனியும் (0.9%) உள்ளன.

இவற்றில் சீனாவும் இந்தியாவும் சேர்ந்தே உலகளாவிய வளர்ச்சியில் 43.6 சதவிகிதம் பங்களிக்கின்றன.

இந்த வளர்ச்சியைக் குறிப்பிட்டுள்ள டெஸ்லா நிறுவனரும் உலக பணக்காரர்களில் முதலிடத்தில் உள்ளவருமான அமெரிக்காவை சேர்ந்த எலான் மஸ்க், அதிகாரத்தின் சமநிலை மாறி வருகிறது என்று கூறியுள்ளார்.

இவரின் இந்தக் கருத்து, சமூக ஊடகங்களில் பேசுபொருளாகியுள்ளது. இந்தியாவும் சீனாவும் முன்னேறியிருப்பதை அவர் குறிப்பிடுகிறாரா அல்லது அமெரிக்கா பின்தங்கியதா குறிப்பிடுகிறாரா என்ற கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

இந்தியா - சீனா - அமெரிக்கா
‘உலகில் அதிகாரப் பரவல்’: இந்தியா - இயூ ஒப்பந்தத்தை சுட்டிக்காட்டிய ஐ.நா. பொதுச் செயலா்
Summary

The balance of power is changing says Elon Musk

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com