சென்னையில் ஒரே நாளில் 6 விமானங்கள் ரத்து: காரணம் என்ன?

போதிய பயணிகள் இல்லாலததால் சென்னையில் ஒரே நாளில் 6 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்Center-Center-Chennai
Published on
Updated on
1 min read

சென்னை: போதிய பயணிகள் இல்லாலததால் சென்னையில் ஒரே நாளில் 6 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் சிங்கப்பூர், மும்பை செல்லும் பயணிகள் அவதியடைந்துள்ளனர்.

சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு முனையத்தில் இருந்து புறப்படும் 3 விமானங்கள், சென்னைக்கு வரும் 3 விமானங்கள் என 6 புதன்கிழமை(ஜூலை 16) ஒரே நாளில் ரத்து செய்யப்பட்டுள்ளன.

விமானங்களின் வருகையும் குறைந்தளவு பயணிகளின் எண்ணிக்கையால் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதனால் மும்பை, சிங்கப்பூர் செல்லும் பயணிகள் அவதியடைந்துள்ளனர்.

வருகை, புறப்பாடு விமானங்களில் பயணம் செய்ய, ஏற்கெனவே முன்பதிவு செய்திருந்த மிகக் குறைந்தளவிலான பயணிகளுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டது. அவா்களின் விமான பயணச்சீட்டுகளும் வேறு விமானங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

Summary

6 flights have been canceled in Chennai in one day due to insufficient passenger numbers.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com