திரைப்பட இயக்குநர் வேலு பிரபாகரன் காலமானார்!

திரைப்பட இயக்குநர் வேலு பிரபாகரன் உடல்நலக் குறைவு காரணமாக வியாழக்கிழமை காலமானார்.
திரைப்பட இயக்குநர் வேலு பிரபாகரன்.
திரைப்பட இயக்குநர் வேலு பிரபாகரன்.
Published on
Updated on
1 min read

திரைப்பட இயக்குநர் வேலு பிரபாகரன்(68) உடல்நலக் குறைவு காரணமாக வியாழக்கிழமை(ஜூலை 17) மாலை காலமானார்.

கடந்த சில நாள்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த வேலு பிரபாகரன், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில், வேலு பிரபாகரன் வியாழக்கிழமை மாலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

வேலு பிரபாகரன், ஒளிப்பதிவாளர், இயக்குநர் மற்றும் நடிகர் என பன்முகத் தன்மை கொண்டவர். ஒளிப்பதிவாளராக சினிமா வாழ்க்கையைத் தொடங்கிய இவர், 1989 ஆம் ஆண்டு வெளியான நாளைய மனிதன் என்ற திரைப்படத்தின் மூலம், இயக்குநராக அவதாரம் எடுத்தார். அதைத்தொடர்ந்து, நெப்போலியன், சத்தியராஜ் உள்ளிட்ட பல்வேறு நடிகர்களை வைத்து படங்களை இயக்கினார்.

1989-ல் ‘நாளைய மனிதன்’ படத்தில் இயக்குநராக அறிமுகமாகி, 1990 இல் ‘அதிசய மனிதன்’ திரைப்படத்தையும் இயக்கினார்.

பின்னர் ஆர்.கே.செல்வமணியின் தயாரிப்பில் அசுரன் மற்றும் ராஜாளி ஆகிய இரண்டு படங்களையும், ராஜாளி, கடவுள், சிவன், புரட்சிக்காரன் என பல திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

இயக்குநராக மட்டுமின்றி நடிகராக அவதாரமெடுத்த வேலு பிரபாகரன் காதல் கதை, ஒரு இயக்குநரின் காதல் டைரி, பீட்ஸா 3, ஜாங்கோ, ரெய்டு, வெப்பன் என 10 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கடைசியாக, கடந்த மே மாதம் வெளியான கஜானா திரைப்படத்திலும் நடித்திருந்தார்.

Summary

Film director Velu Prabhakaran passed away on Thursday due to ill health, reports have emerged.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com