
சென்னை: மு.க. முத்து (77) மறைவைத் தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கவிருந்த அரசு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூத்த மகனும், முதல்வர் மு.க.ஸ்டாலின் சகோதரருமான மு.க. முத்து (77) வயது மூப்பின் காரணமாக சனிக்கிழமை (ஜூலை 19) காலமானதையொட்டி அவரது உடல் பொதுமக்களின் பார்வைக்காக முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவரது இறுதி ஊர்வலம் மாலை 5 மணிக்கு நடைபெறும். சென்னை, பெசன்ட் நகர், மின் மயானத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது.
கருணாநிதியின் கலையுலக வாரிசாகக் கருத்தப்பட்ட மு.க.முத்துவின் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
இந்நிலையில், மு.க.முத்துவின் மறைவைத் தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கவிருந்த அரசு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.