மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன்
மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன்

பதிவுத் தபால் சேவை நிறுத்தம்: சு.வெங்கடேசன் கண்டனம்

128 ஆண்டு நடைமுறையில் இருந்த பதிவுத் தபால் சேவை செப்டம்பர் முதல் நிறுத்தப்படும் என்ற மத்திய அரசின் முடிவிற்கு சு.வெங்கடேசன் எம்பி கண்டனம் தெரிவித்துள்ளார்.
Published on

128 ஆண்டு நடைமுறையில் இருந்த பதிவுத் தபால் சேவை செப்டம்பர் முதல் நிறுத்தப்படும் என்ற மத்திய அரசின் முடிவிற்கு சு.வெங்கடேசன் எம்பி கண்டனம் தெரிவித்துள்ளார்.

எளிய மக்கள் பயன்படுத்தி வரும் பதிவுத் தபால் சேவையை செப்டம்பர் முதல் நிறுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளதற்கு தபால் ஊழியர்கள் சங்கங்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள், பொது மக்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், மோடி சேவை கார்ப்பரேட்டுகளுக்கு மட்டுமே என மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது:

128 ஆண்டு நடைமுறையில் இருந்த பதிவுத் தபால் சேவை செப்டம்பர் முதல் நிறுத்தம். விரைவுத் தபால் சேவையுடன் இணைப்பு என அஞ்சல்துறை அறிவிப்பு.

பதிவுத் தபால் சேவை குறைந்த பட்ச கட்டணம் ரூ 26. விரைவுத் தபால் எனில் ரூ 41

பதிவுத் தபால் ஒப்புகை கட்டணம் ரூ 3. விரைவுத் தபாலில் ரூ 10

பதிவுத் தபால் நபருக்கே போய்ச் சேரும். விரைவுத் தபால் முகவரிக்கு போய்ச் சேரும்.

பதிவுத் தபால் எடை கூடினால் மட்டுமே கட்டணம் கூடும். தேசம் முழுக்க எவ்வளவு தூரம் என்றாலும் ஒரே கட்டணம். விரைவுத் தபால் எடை கூடினாலும் கூடும். தூரம் கூடினாலும் கூடும்.

எல்லாம் எதற்கு? மக்களை தனியார் கூரியர் நிறுவனங்களை நோக்கி தள்ளுகிற ஏற்பாடு.

"தக் சேவா; ஜன் சேவா" என்பது அஞ்சல் துறையின் முழக்கம். அதாவது அஞ்சல் சேவை மக்கள் சேவையாம்.

உண்மையில் "மோடி சேவை கார்ப்பரேட்டுகளுக்கு மட்டுமே” என தெரிவித்துள்ளார்.

Summary

MP Su. Venkatesan has condemned the central government's decision to discontinue the 128-year-old registered postal service from September.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com