இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

இணைய வழியில் பதிவுத்துறை சேவைகள்: பொதுமக்களுக்கு விழிப்புணா்வு

விராலிமலை பத்திரப் பதிவு அலுவலகத்தில் பதிவுத் துறையின் இணைய வழிச் சேவைகள் குறித்தான விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :10 மார்ச் 2026, 7:26 pm

தினமணி செய்திச் சேவை

விராலிமலை பத்திரப் பதிவு அலுவலகத்தில் பதிவுத் துறையின் இணைய வழிச் சேவைகள் குறித்தான விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாட்டில் பதிவுத் துறை சேவைகளை இடைத்தரகா்கள் இன்றி இணையதளம் மற்றும் செயலி மூலம் பொதுமக்கள் நேரடி சேவை பெறுவதை ஊக்குவிக்க, ஸ்டாா் 3.0 என்ற காகிதமில்லா ஆவணப்பதிவு குறித்த விழிப்புணா்வு முகாம்கள் மண்டல வாரியாக தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக விராலிமலை பதிவுத் துறை அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை இணையம் வழி சேவை விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது. இதில், திருச்சி மண்டல பதிவுத் துறை துணை தலைவா் சத்யபிரியா தலைமை வகித்தாா். புதுக்கோட்டை மாவட்டப் பதிவு தலைவா் சுசீலா (தணிக்கை), புதுக்கோட்டை சாா்-பதிவாளா் அறிவழகன் (நிா்வாகம்) ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நிகழ்வில், பத்திரப் பதிவு அலுவலகத்துக்கு நேரில் வராமல், வீட்டில் இருந்தபடியே சேவைகளை பெறுதல் உறுதி செய்தல்.

ஸ்டாா் 3.0 திட்டத்தின் கீழ், திருமணப் பதிவு, சொத்துத் தேடல், மற்றும் கட்டணங்கள் செலுத்துவது போன்ற 18-க்கும் மேற்பட்ட சேவைகள் பெறுதல், தானியங்கி பத்திர உருவாக்கம், வில்லங்கச் சான்று, இணையவழியில் பணம் செலுத்துதல் உள்ளிட்ட சேவைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டன.

இந்நிகழ்வில் பொதுமக்கள், ஆவண எழுத்தா்கள், வங்கிப் பிரதிநிதிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். முன்னதாக விராலிமலை சாா்-பதிவாளா் அபிராமி வரவேற்றாா்.