ஆனால், இத்தனை லட்சம் பேரில், 30 அமைச்சர்கள், 150 சட்டப்பேரவை உறுப்பினர்கள் , 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள், 10 மாநிலங்களவை உறுப்பினர்கள், 76 மாவட்டச் செயலாளர்கள், 21 மாநகர செயலாளர்கள், 160 நகர செயலாளர்கள், 490 பேரூர் செயலாளர்கள், 936 ஒன்றிய செயலாளர்கள், 236 பகுதி செயலாளர்கள், 1,505 பகுதி வார்டு செயலாளர்கள், 3,876 நகர வார்டு செயலாளர்கள், 7,629 பேரூர் வார்டு செயலாளர்கள், 12 ஆயிரத்தி 525 ஊராட்சி செயலாளர்கள், 79 ஆயிரத்தி 962 கிளைச் செயலாளர்கள், 68 ஆயிரத்தி 467 பூத் பொறுப்பாளர்கள், பல ஆயிரம் சார்பு அணி நிர்வாகிகள் என்று இத்தனை பேருக்கு திமுக பொறுப்புகளை வழங்கியிருக்கிறது. உங்களை வாழ வைத்த கழகத்தை நீங்கள் வாழ வையுங்கள். இந்த இயக்கத்துக்கு உண்மையாக இருங்கள். இதுதான் என்னுடைய பணிவான வேண்டுகோள்.