மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு: டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி
மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து புதன்கிழமை காலை(ஜூன் 4) 113 அடியை நெருங்கியதால் டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


மேட்டூர்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து புதன்கிழமை காலை(ஜூன் 4) 113 அடியை நெருங்கியதால் டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
காவிரியின் நீர்பிடிப்புப் பகுதிகளிலும் அதன் துணை நதிகளான பாலாறு, சின்னாறு, தொப்பை யாறு நீர்பிடிப்புப் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.
மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. செவ்வாய்க்கிழமை காலை மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 3,017 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து மாலையில் வினாடிக்கு 5,908 கன அடியாக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு புதன்கிழமை வினாடிக்கு 6,234 கன அடியாக அதிகரித்துள்ளது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 1000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையில் இருந்து பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவைவிட அணைக்கு வரும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் 112.71 அடியிலிருந்து 113 அடியாக உயர்ந்துள்ளது.
அணையின் நீர் இருப்பு 82.74 டிஎம்சியாக உள்ளது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் காவிரி டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...