இதயம் உடைந்துவிட்டது: ஸ்மிருதி மந்தனா

ஆர்சிபி மகளிரணி கேப்டன் ஸ்மிருதி மந்தனா கூறியதாவது...
Smriti Mandahana share hearfelt emotional post about rcb Bangalore stampede
ஸ்மிருதி மந்தனாபடங்கள்: பிடிஐ, இன்ஸ்டா / ஆர்சிபி.
Published on
Updated on
1 min read

பெங்களூரில் ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தில் ஏற்பட்ட பலிக்கு ஆர்சிபி மகளிரணி கேப்டன் ஸ்மிருதி மந்தனா ‘இதயம் உடைந்துவிட்டது” என உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.

பெங்களூரில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட நெரிசலில் 11 பேர் பலியாகியிருக்கிறார்கள். இது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

18 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் கோப்பை கிடைத்த மகிழ்ச்சியில் ஆர்சிபி ரசிகர்கள் சின்னசாமி திடலில் குவிந்தார்கள்.

ஆர்சிபி நிர்வாகம், விராட் கோலி, ஏபிடி தங்களது கருத்துகளை பகிர்ந்துகொண்ட நிலையில் ஸ்மிருதி மந்தனா தனது வருத்தத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

ஸ்மிருதி மந்தனா கூறியதாவது:

பெங்களூரில் உயிரிழந்தவர்கள் செய்தி கேட்டு இதயம் உடைந்துவிட்டது. பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்தினருக்கும் உறவினர்களும் எனது அஞ்சலிகள். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் எனக் கூறியுள்ளார்.

ஆர்சிபி அணிக்கு முதல் கோப்பையை வென்றுகொடுத்தது ஸ்மிருதி மந்தனா என்பது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் கொண்டாட்டத்துக்கு அனுமதி அளித்தது குறித்து பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com