ஆர்சிபிக்கு 3 ஆண்டுகளில் 3 கோப்பைகள்..! ஸ்மிருதி மந்தனா நெகிழ்ச்சி!
மகளிர் பிரீமியர் லீக்கை இரண்டாவது முறையாக வென்ற ஆர்சிபி கேப்டன் ஸ்மிருதி மந்தனா மிகுந்த மகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.
ஆர்சிபி அணிகள் (ஆடவர், மகளிர்) மூன்றாண்டுகளில் மூன்று கோப்பைகளை வென்றுள்ளதாக ஸ்மிருதி மந்தனா பெருமையுடன் பேசியுள்ளார்.
வதோதராவில் நேற்றிரவு நடைபெற்ற மகளிர் பிரீமியர் லீக் இறுதிப் போட்டியில் ஆர்சிபி அணி த்ரில் வெற்றி பெற்றது.
ஏற்கெனவே, 2024ஆம் ஆண்டு கோப்பை வென்றிருந்தது. ஆடவர் ஆர்சிபி அணி கடந்தாண்டு (2025) ஐபிஎல் கோப்பையை வென்றிருந்தது.
இந்த வெற்றி குறித்து ஆர்சிபி மகளிரணி கேப்டன் ஸ்மிருதி மந்தனா பேசியிருப்பதாவது:
மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். ஆர்சிபி ரசிகர்கள் உலகத்திலேயே சிறந்தவர்கள்நாங்கள் எங்கு விளையாடினாலும் எங்களுக்கு ஆதரவு கிடைக்கிறது.
ஆர்சிபி அணிகளின் கிளைகள் மூன்றாண்டுகளில் மூன்று கோப்பைகள் வென்றது அற்புதமாக இருக்கிறது.
இந்த ஆடுகளத்தில் பேட்டிங் செய்ய நன்றாக இருக்குமென நினைத்தோம். 203 ரன்கள் இறுதிப் போட்டியில் நல்ல இலக்குதான்.
நான்கு ஓவர்களில் 19 ரன்கள் கொடுத்து, லாரென் பெல் ஆட்ட நாயகிக்கான பந்துவீச்சை வீசினார்.
அணியின் உதவியாளர்கள் மிகுந்த ஆதரவாக இருந்தார்கள். எங்கள் அனைவருக்குமான பங்கு குறித்து தெளிவான முடிவுகள் இருந்தன. அது எங்கள் வேலையை எளிதாக்கியது.
வீராங்கனைகள் அதீதமாக உழைத்தார்கள். அது எங்களது நம்பிக்கையை அதிகரித்தது. ஆனால், ஜார்ஜியா வால் பேட்டிங்கில் செய்தது மிகவும் சிறப்பு வாய்ந்தது. அனைவருமே வீட்டிற்குச் சென்று அவர்களது பங்கு குறித்து பேசும் அளவுக்கு இருக்கிறது என்றார்
Royal Challengers Bengaluru captain Smriti Mandhana on Thursday said three titles in three years was an amazing result for the franchise following the win in the Women's Premier League final here.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

