
விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே மணலூரில் சாலையின் ஓரத்தில் சென்றுகொண்டிருந்த பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது கார் மோதியதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 4 பேர் படுகாயமடைந்தனர்.
கடலூர் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் பகுதியைச் சேர்ந்த பத்துக்கும் மேற்பட்டவர்கள், கள்ளக்குறிச்சி மாவட்டம் மேல்நாரியப்பனுர் புனித அந்தோணியர் ஆலயத்திற்கு பாதயாத்திரையாக புறப்பட்டுச் சென்றனர்.
இந்த நிலையில், விருத்தாசலம் மணலூர் பகுதியில் புதன்கிழமை அதிகாலை பாதயாத்திரையாக சாலை ஓரத்தில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த கார் ஒன்று பக்தர்கள் மீது மோதியது. இதில், பக்தர்கள் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
மேலும், 4 பேர் படுகாயமடைந்த நிலையில் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மேல்சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விபத்தில் பலியான 3 பேரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. பாதயாத்திரை சென்ற பக்தர்கள் 3 பேர் விபத்தில் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.