மதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையா?: நயினார் பதில்

திமுக கூட்டணியில் உள்ள எந்த கட்சியுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது, மதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோமா என்பதை இப்போது கூற முடியாது
நயினார் நாகேந்திரன்
நயினார் நாகேந்திரன்X | Nainar Nagenthiran
Published on
Updated on
2 min read

திருநெல்வேலி: திமுக கூட்டணியில் உள்ள எந்த கட்சியுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது, மதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோமா என்பதை இப்போது கூற முடியாது என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

திருநெல்வேலியில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் புதன்கிழமை செய்தியாளர்களுடனான சந்திப்பின்போது, திமுக கூட்டணியில் உள்ள எந்த கட்சியுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது, மதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துகிறோமா என்பதை இப்போது கூற முடியாது.

கடந்த 11 ஆண்டுகளில் மூலதன கணக்கில் கனிசமான முறையில் மோடி நிதி அறிவித்துள்ளார். நாடு முன்னேற வேண்டும் என்றால் அது பாதுகாப்பானதாக இருக்க வேண்டும். நாட்டின் மேம்பாட்டிற்கு உட்கட்டமைப்பு வசதியை உயர்த்த வேண்டும். 85-க்கும் மேற்பட்ட புதிய விமான நிலையம், 400-க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரயில், பல லட்சம் கோடி செலவில் ரயில் நிலையம், சாலைகள் போன்றவை அமைக்கப்பட்டுள்ளது.

பஹல்காமில் பாகிஸ்தான் தீவிரவாதிகளால் நடந்த பயங்கரவாதத்திற்கு 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை மூலம் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் பெருமையை உலகவில் உயர்த்தி பாதுகாப்பிற்கு பெரும் உதவியை மோடி செய்துள்ளார். விவசாயத்திற்கு 10 ஆயிரம் கோடிக்கு மேல் செலவு செய்துள்ளார். நியாயவிலை கடைகள் மூலம் ஏழைகளுக்கான அரிசியை மத்திய அரசு வழங்கி வகிறது. ஆனால், திமுக அரசு தான் வழங்குவதாக திமுகவினர் சொல்லி வருகின்றனர்.

நாட்டில் மிகப்பெரிய மாற்றத்தை மோடி தந்துள்ளார். பெரும் பொருளாதார மதிப்பு கொண்ட நாடுகளின் வரிசையில் 14 ஆவது இடத்தில் இருந்த நாட்டை 4 ஆவது இடத்திற்கு கொண்டு வந்துள்ளார். தமிழ்நாட்டிற்கு ஒரு பைசா பாக்கியில்லாமல் ஜிஎஸ்டி வரி வருவாயை மத்திய அரசு கொடுத்துள்ளது. தமிழை உலகம் முழுவதும் கொண்டு சேர்த்துள்ளார். பேரிடர் நிதி கிடைக்கவில்லை என திமுக அரசு உண்மையை மறைத்து கூறி வருகிறது. ஆண்டுதோறும் கொடுக்க வேண்டிய பேரிடர் நிதி முன்கூட்டியே கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக கொடுக்கப்பட்ட பேரிடர் நிதிக்கான கணக்கை அரசு முறையாக காட்டாமல் இருந்து வருகிறது.

எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி

வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கட்சி கூட்டணியின் ஆட்சி தான் அமையும், அதுவும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தான் ஆட்சி அமைப்போம்.

பலமான கூட்டணி என்று கூறி வரும் திமுக தேர்தலில் தனித்துப் போட்டியிட தயாரா? என நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பினார்.

கீழடியில் தொழில்நுட்ப உதவி இல்லை என தமிழக அரசு சொல்கிறது. கீழடியில் ஆய்வு நடத்துவதற்கு உதவி தேவைப்பட்டால் நேரடியாக மத்திய அரசை வலியுறுத்துவேன்.

பாஜக கூட்டணிக்கு வரும் திமுக கூட்டணி கட்சி

திமுக கூட்டணியில் இருந்து பாஜக கூட்டணிக்கு வரும் பெரிய கட்சி எது என்பதை இப்போதே கூற முடியாது. அதிகமான கட்சிகள் பாஜகவின் கூட்டணிக்கு வருவார்கள். எந்தெந்த கட்சிகள் என்பதை இப்போதே கூற முடியாது.

பொறுத்திருந்து பார்ப்போம்

பாஜக பலமில்லாத கட்சி என கூறும் திமுக, திமுக பலமான கட்சி என்றால் அவர்கள் தைரியமாக தனியாக நிற்கட்டும். திமுக கூட்டணி பிரச்னையை பொறுத்திருந்து பார்ப்போம் என நயினார் நாகேந்திரன் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com