
செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்பட 23 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்னிந்திய பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, புதன்கிழமை(ஜூன் 11) முதல் ஜூன் 16-ஆம் தேதி வரை வடதமிழகத்தில் அநேக இடங்களிலும், தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஜூன் 11-இல் திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூா், திருப்பத்தூா், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூா், அரியலூா், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதேபோல், ஜூன் 12- இல் கோவை, நீலகிரி, தேனி, தென்காசி, திருவள்ளூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளது.
இந்நிலையில் புதன்கிழமை(ஜூன் 11) காலை 10 மணி வரை செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தேனி, தென்காசி, கன்னியாகுமரி மற்றும் கோவை ஆகிய 6 மாவட்டங்களில் காலை 10 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.