
ராகிங்கை தடுக்க கண்காணிப்பு கேமரா, 7 பேர் குழு: அமைச்சர் கோ.வி.செழியன்
பள்ளி மற்றும் கல்லூரிகளில் ராகிங்கை தடுக்க கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு 5 பேர் மற்றும் 7 பேர் கொண்ட குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கோ.வி. செழியன் தெரிவித்தார்.

உயர்க்கல்வித் துறை அமைச்சர் கோ.வி.செழியன்
தஞ்சாவூர்: தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் ராகிங்கை தடுக்க கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு 5 பேர் மற்றும் 7 பேர் கொண்ட குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளதாக உயர்க்கல்வித் துறை அமைச்சர் கோ.வி.செழியன் தெரிவித்தார்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் ஜூன் 15 மற்றும் 16 ஆகிய இரண்டு நாள்கள் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவதற்காக க முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகிறார்.
முதல்வரை வரவேற்கும் வகையில் தஞ்சை பழைய பேருந்து நிலையத்தில் முதல்வர் மற்றும் துணை முதல்வர் உருவம் பொறித்த ராட்சத பலூன் பறக்க விடப்பட்டது.
பலூனை உயர்கல்வித் துறை அமைச்சர் கோ.வி.செழியன் பறக்கவிட்டார்.

முதல்வரை வரவேற்கும் வகையில் தஞ்சை பழைய பேருந்து நிலையத்தில் பறக்கவிடப்பட்டுள்ள முதல்வர், துணைமுதல்வர் உருவம் பொறித்த ராட்சத பலூன்
பின்னர் அவர் செய்தியாளர்களுடன் பேசியதாவது:
பள்ளி மற்றும் கல்லூரிகளில் ராகிங்கை தடுக்க கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு 5 பேர் மற்றும் 7 பேர் கொண்ட குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
உயர்க்கல்வியில் இடை நிறுத்தம் இல்லாமல் கல்வியைத் தொடர தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
மேட்டூர் அணையில் இன்று திறக்கப்படும் தண்ணீர் கடைமடை வரை எளிதாக செல்லவதற்காக ஏ மற்றும் பி வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டு உள்ளன.
மேலும், விவசாயிகளுக்கு விதை நெல் தட்டுப்பாடு இல்லாமல் கிடைப்பதற்காக போதியளவு கையிறுப்பு உள்ளதாக அமைச்சர் கோ.வி.செழியன் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது


தமிழர் பண்பாட்டுக்கு இந்தியா என்றும் மதிப்பளிக்கும்: கொழும்பில் இந்திய வம்சாவளியினரிடம் ராஜ்நாத் சிங் உறுதி

காவல் நிலையங்களில் கண்காணிப்பு கேமரா பதிவுகள் எவ்வளவு நாள்கள் பராமரிக்கப்படும்? டிஜிபி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு




