கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை இடம் என்பதை இபிஎஸ் முடிவு செய்வார்: கே. பி. ராமலிங்கம்

தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கு எத்தனை இடம் என்பதை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமிதான் முடிவு செய்வார்
தமிழக பாஜக மாநில துணைத் தலைவர் கே. பி. ராமலிங்கம்
தமிழக பாஜக மாநில துணைத் தலைவர் கே. பி. ராமலிங்கம்
Published on
Updated on
1 min read

சேலம்: தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கு எத்தனை இடம் என்பதை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமிதான் முடிவு செய்வார் என்று தமிழக பாஜக மாநில துணைத் தலைவர் கே. பி. ராமலிங்கம் தெரிவித்தார்.

சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள வீட்டில் எடப்பாடி பழனிசாமியை பாஜக மாநில துணைத்தலைவர் கே.பி. ராமலிங்கம் சனிக்கிழமை நேரில் சந்தித்து பேசினார்.

பின்னர் செய்தியாளர்களுடன் அவர் பேசியதாவது:

காவிரி ஆறு மாசுபடுவதிலிருந்து முழுமையாக மீட்டெடுக்க, ‘நடந்தாய் வாழி காவிரி’ என்ற திட்டத்தை சட்டப்பேரவையில் அப்போதைய முதல்வா் எடப்பாடி பழனிசாமி 110-வது விதியின் கீழ் செப்டம்பா் மாதம் 2019 ஆம் ஆண்டு அறிவித்தாா்.

தமிழகத்தின் மிகப்பெரிய திட்டமாக இருக்கக்கூடிய நடந்தாய் வாழி காவிரி என்ற திட்டம் காவிரி ஆற்றிலே வந்து கலக்கக்கூடிய கிளை நதிகளை அதே இடத்தில் சுத்தப்படுத்தி காவிரியில் கலக்குற போது சுத்தமாக நேராக கலக்க வேண்டும். இதற்கான ஒட்டுமொத்த திட்ட மதிப்பு ரூ.11,900 கோடி. முதற்கட்டமாக இந்த திட்டத்திற்காக தற்போது மத்திய அரசு ரூ.990 கோடியை ஒதுக்கியுள்ளது. இது தொடர்பாக முதலில் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்த எடப்பாடி பழனிசாமிக்கு விவசாயிகள் சங்கங்கள் சார்பில் நன்றி தெரிவிப்பதற்காக வந்தேன்.

இதுபோன்ற மிகப்பெரிய திட்டங்களை எல்லாம் விவசாயிகளுக்காக தமிழகத்தில் அறிமுகப்படுத்திய நிலையில் உண்மையான விவசாயிகளை பச்சை துண்டு போட்டு ஏமாற்றுகிறார் ஸ்டாலின்.

முருக பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்க எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுத்தோம். காவேரி தூர் வாராத நிலையில் கடைமடைக்கு தண்ணீர் செல்லாதது அனைத்தும் உண்மை.

பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் 78 இடங்கள் கேட்போம் என கூறியது குறித்து செய்தியாளர்கள் கேள்விக்கு, தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணியில் எந்த கட்சிக்கு எத்தனை இடங்கள் என்பதை அவர் தான் முடிவு செய்வார் என்று கூறினார்.

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் திமுக அரசை தூக்கி எறிய வேண்டும் என்பதே அனைவரின் நோக்கமாக இருக்கிறது. இந்த நோக்கத்தை நிறைவேற்றுவதில் பாஜக 100 சதவீதம் உறுதியாக உள்ளது. வரும் தேர்தலில் கடுமையாக உழைத்து எடப்பாடி பழனிசாமியை நிச்சயம் முதல்வராக்கிய தீருவோம் என்ற கே.பி. ராமலிங்கம்.

மேலும், தமிழகத்தில் ஆட்சி அமைக்க வேண்டும் என்பது எல்லா கட்சிகளுக்கும் உள்ள ஆசை என்றும் அதற்காக தான் ஒவ்வொரு கட்சியினரும் உழைக்கிறார்கள் என்று அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com