மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி தேர்தலுக்கானது இல்லை! - திருமாவளவன் பேச்சு இடைத்தேர்தல்: தவெக கூட்டணி வேட்பாளர்கள் நாளை (செப். 10) அறிவிப்பு!நிஃப்டி 23,450-க்கு கீழ் சரிவு: 3 மாதக் குறைந்தபட்சத்தில் பங்குச் சந்தை; சென்செக்ஸ் 813 புள்ளிகள் வீழ்ச்சி!!மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி! தவெக தலைமையிலாக கூட்டணியின் பெயர்!லாரியிலிருந்து விழுந்த இரும்புராடு! பைக்கில் சென்ற மாடுபிடி வீரர்கள் பலி!!தீபாவளிக்கு ஊருக்குப் போவோர் திரும்பி வர! நாளை முதல் ரயில் டிக்கெட் முன்பதிவுபட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்! அரசாணை வெளியீடுநார்வே மன்னர் ஹரால்டின் இறுதிச் சடங்கு! ஏராளமான உலகத் தலைவர்கள் பங்கேற்பு!சேலம் - திண்டுக்கல்; ஒசூர் - ஓமலூர் இருவழி ரயில் தடத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!பாரத ரத்னா பெற்ற 92 வயது விஞ்ஞானிக்கு எஸ்.ஐ.ஆர். நோட்டீஸ்! வினோதமான கேள்வி! முதல்வர் விஜய்யின் உடல்மொழி மனித மாண்புகளுக்கு எதிரானது! திருமாவளவன் கண்டனம்செங்குன்றம் புதிய பேருந்து நிலையம் திறப்பு எப்போது? பயணிகள் வேதனை!திடீர் திருப்பம்! தவெக நிர்வாகி கொலைக்குப் பின்னணியில் ரீல்ஸ் காரணமா?மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலுக்கான திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

பண உதவியைத் தாண்டி வேறென்ன உதவிகள் வேண்டும்.. உருக்கமாக டாடா குழுமத் தலைவர்!

லண்டனில் நிர்கதியாக நிற்கும் குழந்தைகளுக்கு பண உதவியைத் தாண்டி வேறென்ன உதவிகள் வேண்டுமென அறிந்து நிறைவேற்றுவோம்

டாடா குழுமத் தலைவர் சந்திரசேகரன்

Published On :

அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில் தாய், தந்தையை இழந்து லண்டனில் நிர்கதியாக நிற்கும் குழந்தைகளுக்கு பண உதவியைத் தாண்டி வேறென்ன உதவிகள் வேண்டுமென அறிந்து நிறைவேற்றுவோம் என உருக்கமாக தெரிவித்துள்ள டாடா குழுமத் தலைவர் சந்திரசேகரன், குழந்தைகளை காப்பதற்கான ஏற்பாடுகளை அறக்கட்டளை செய்யும் என கூறினார்.

இதுதொடர்பாக தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ஜூன் 12 ஆம் தேதி அகமதாபாத் அருகே விமானம் விபத்துக்குள்ளான பிறகு 270-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த விமான விபத்துக்கு பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ள டாடா சன்ஸ் மற்றும் ஏர் இந்தியா தலைவர் என். சந்திரசேகரன், இந்த விபத்து டாடா நடத்தும் விமான நிறுவனத்தில் நடந்ததற்கு நான் மிகவும் வருந்துகிறேன். விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆறுதலையும் முழு ஆதரவையும் உறுதியளித்தவர், இதயத்தை நொறுக்கும் விஷயம் இது. விமான விபத்தில் இழப்பை சந்தித்தவர்களுக்கு ஆறுதல் கூற எனக்கு வார்த்தைகள் இல்லை, ஆறுதல் சொல்வது மிகவும் கடினமான ஒன்று. நாம் என்ன சொன்னாலும் அவர்களின் இழப்பை ஈடு செய்ய முடியாது. அவர்களின் தூக்கத்தில் நானும் பங்கேற்கிறேன். இப்போதும் எதிர்காலத்திலும் அவர்களுக்கு ஆதரவளிப்பதும் மட்டுமே நாம் செய்ய முடியும்.

குடும்பங்களை இழந்தவர்களுக்கு நான் வாழ்நாள் முழுவதும் துணை நிற்பேன். அவர்களுக்கு எப்போது வேண்டுமானாலும், எந்த வகையில் வேண்டுமானலும் உதவி செய்வேன்.

ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவி

உயிரிழந்த மனைவியின் அஸ்தியை கரைக்க லண்டனில் இருந்து இந்தியா வந்து, விமான விபத்தில் தந்தையையும் இழந்து லண்டனில்

நிர்கதியாக நிற்கும் 4, 8 வயது குழந்தைகளுக்கு பண உதவியைத் தாண்டி வேறென்ன உதவிகள் வேண்டுமென அறிந்து நிறைவேற்றுவோம் என

உருக்கமாக தெரிவித்த சந்திரசேகரன், குழந்தைகளை காப்பதற்கான ஏற்பாடுகளை அறக்கட்டளை செய்யும் என கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.