திமுகவினருக்கு பதவி வெறி தலைக்கேறிவிட்டதா?: இபிஎஸ் கண்டனம்

ஒட்டப்பிடாரத்தில் அதிமுக நிர்வாகி முத்து பாலகிருஷ்ணனை, திமுக நிர்வாகி கருணாகரன் உள்ளிட்டோர் லாரி ஏற்றி படுகொலை செய்ததாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது
EPS urges RBI
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமிகோப்புப்படம்.
Published on
Updated on
2 min read

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரத்தில் அதிமுக நிர்வாகி முத்து பாலகிருஷ்ணனை, திமுக நிர்வாகி கருணாகரன் உள்ளிட்டோர் லாரி ஏற்றி படுகொலை செய்ததாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது என தெரிவித்துள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, திமுகவினருக்கு பதவி வெறி தலைக்கேறிவிட்டதா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

ஓட்டப்பிடாரம், குறுக்குச்சாலை அருகே உள்ள கொல்லம் பரும்பு கிராமத்தைச் சோ்ந்தவா் முத்து பாலகிருஷ்ணன். அதிமுக கிளைச் செயலா்.

இவரது மனைவி வள்ளியம்மாள். கடந்த 1996 முதல் 2001 ஆம் ஆண்டு வரை கொல்லம்பரும்பு ஊராட்சித் தலைவராக பதவி வகித்து வந்துள்ளாா். முத்து பாலகிருஷ்ணன் தற்போது மனை வணிகம் தொழில் செய்து வந்துள்ளாா்.

இதற்கிடையே செவ்வாய்க்கிழமை காலையில் முத்து பாலகிருஷ்ணன் தனது இருசக்கர வாகனத்தில் சந்திரகிரி அருகே வந்தபோது, எதிரே வந்த கல்குவாரி டிப்பா் லாரி மோதியதாம். இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதையடுத்து, ஓட்டப்பிடாரம் போலீஸாா் அவரது உடலை மீட்டு கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு, முத்து பாலகிருஷ்ணனின் உறவினா்கள் திரண்டு வந்து, இது விபத்து அல்ல. திட்டமிடப்பட்ட கொலை என்றும், அதற்கு காரணமானவா்களை கைது செய்ய வேண்டுமெனவும் கூறி உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதைத் தொடா்ந்து விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநா் சௌந்தர்ராஜனை ஓட்டப்பிடாரம் போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

இந்நிலையில், அதிமுக நிர்வாகி முத்து பாலகிருஷ்ணனை, திமுக நிர்வாகி கருணாகரன் உள்ளிட்டோர் லாரி ஏற்றி படுகொலை செய்ததாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக நிர்வாகி முத்து பாலகிருஷ்ணனை, திமுக நிர்வாகி கருணாகரன் உள்ளிட்டோர் லாரி ஏற்றி படுகொலை செய்ததாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. இக்கொலைக்கு உள்ளாட்சி தேர்தல் போட்டியும் ஒரு காரணம் என்ன செய்திகள் வருகின்றன.

இதையும் "தனிப்பட்ட கொலை" என்ற அளவோடு தான் ஸ்டாலின் மாடல் திமுக அரசு கடந்து செல்ல முனையுமா?

திமுக ஆட்சியில் உள்ளாட்சி தேர்தல் என்பது இவர்களின் அராஜகத்திற்கு இடையில் தான் நடைபெறும் என்பது நாடறிந்த உண்மை. ஆனால், அதற்காக, எதிர்க்கட்சியைச் சார்ந்தோரை கொலை செய்யும் அளவிற்கு திமுகவினருக்கு பதவி வெறி தலைக்கேறிவிட்டதா?

சட்டம்-ஒழுங்கை அடியோடு சீர்குலைத்துவிட்டு, அதை தட்டிக் கேட்கும் இடத்தில் இருக்கும் எதிர்க்கட்சியினரின் உயிருக்கே பாதுகாப்பற்ற நிலையில், தமிழ்நாட்டை படுபாதாளத்திற்கு தள்ளியுள்ள ஸ்டாலின் மாடல் திமுக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

முத்து பாலகிருஷ்ணன் கொலை வழக்கில் தொடர்புள்ள திமுக பிரமுகர் கருணாகரன் உள்ளிட்ட அனைவர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Summary

The news that ADMK executive Muthu Balakrishnan was murdered by DMK executive Karunakaran and others in a truck is shocking.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com