அஜித்குமாரைத் தேற்ற என்னிடம் வார்த்தைகள் இல்லை! மு.க. ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 240 உயர்வு!இன்று இந்தியா வருகிறாா் டிரம்ப் மகள்இன்று 14 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புஇளையராஜா இசை நிகழ்ச்சி: மெட்ரோ ரயிலில் இலவசம் பயணம்நிதியாண்டில் ரிசா்வ் வங்கி இருப்பு நிலை ரூ.91.97 லட்சம் கோடிபோா்க் கால பாலியல் வன்முறை: ஐ.நா. கருப்புப் பட்டியலில் முதல்முறையாக இஸ்ரேல், ரஷிய படைகள்!விசாரணை முடிந்து 3 மாதங்களில் தீா்ப்பு: உயா்நீதிமன்றங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
/

பெண் யானைக்கு சிகிச்சையளித்த மருத்துவரைத் தாக்கிய யானைகள்!

ஒடிசாவில் பெண் யானைக்கு சிகிச்சையளித்த மருத்துவரை யானைகள் தாக்கியதைப் பற்றி...

News image

கோப்புப் படம்

Updated On :5 மார்ச் 2025, 3:28 pm IST

ஒடிசா வனப்பகுதியில் பெண் யானைக்கு சிகிச்சையளிக்கும்போது மற்ற யானைகள் தாக்கியதில் கால்நடை மருத்துவர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

பாலாசோர் மாவட்டத்திலுள்ள குல்திஹா ரிசர்வ் வனப்பகுதியில் ரிசியா ஏரியின் கரையில் தவறி விழுந்து மண்ணில் சிக்கி உடல் நலம் பாதிக்கப்பட்ட பெண் யானைக்கு சிகிச்சையளிக்க வனத்துறை அதிகாரிகளும் கால்நடை மருத்துவர் ஒருவரும் நேற்று (மார்ச் 4) அங்கு சென்றிருந்தனர்.

இந்நிலையில், திடீரென அங்கு வந்த காட்டு யானைகள் கூட்டம் ஒன்று அவர்கள் அனைவரையும் விரட்டியுள்ளது. அப்போது, தப்பியோட முற்பட்ட கீழே விழுந்த நிலாகிரி கால்நடை மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் சுபாசிஸ் மஹாபத்ராவை யானைகள் தாக்கியுள்ளன. ஆனால், இந்த தாக்குதலில் மற்ற அதிகாரிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இதனைத் தொடர்ந்து, படுகாயமடைந்து சுயநினைவின்றி இருந்த மருத்துவரை மீட்ட வனத்துறையினர் அவரை அம்மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கிருந்து அவர் மேல் சிகிச்சைக்காக கட்டக்கிலுள்ள எஸ்சிபி மருத்துவமனைக்கு மற்றப்பட்டுள்ளார். இருப்பினும், அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாகவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.