முதல்வர் விஜய் அரசு வேலை வழங்கியிருப்பதும் ஒருவகை லஞ்சம்தான்: பாஜக36 குடும்பங்களில், வெறும் 31 பேருக்கு மட்டும் அரசுப் பணி ஏன்? டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து 95.32 ஆக நிறைவு!ஐடி பங்குகள் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 828 புள்ளிகளுடனும், நிஃப்டி 244 புள்ளிகள் உயர்வு!செந்தில் பாலாஜியின் வெற்றிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!செந்தில் பாலாஜிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!வங்கதேசம் திரும்பப் போவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு! திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு இடைக்காலத் தடை!
/

சிறையிலிருந்து விடுதலையான குற்றவாளி வெட்டிக் கொலை!

ஒடிசாவில் சிறையிலிருந்து விடுதலையான குற்றவாளி கொலை செய்யப்பட்டுள்ளதைப் பற்றி...

News image

கோப்புப் படம்

Updated On :6 மார்ச் 2025, 2:28 pm IST

ஒடிசாவின் கஞ்சம் மாவட்டத்தில் சிறையிலிருந்து வெளியான பதிவு குற்றவாளி பட்டபகலில் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

கஞ்சம் மாவட்டத்தின் துலசிப்பூர் பஞ்சாயத்து தலைவரான மினாத்தி தாஸ் என்பவரின் கணவர் ரபிந்திர தாஸ் (வயது 41) பதிவு குற்றவாளியான இவர் மீது 41 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த குற்றவழக்குகளினால் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர் கடந்த 3 மாதஙக்ளுக்கு முன்பு விடுதலையானார்.

இந்நிலையில், நேற்று (மார்ச் 5) காலை 7 மணியளவில் கிராமத்தின் சாலையில் ரபிந்திர தாஸ் தனியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அவரை 6 பேர் கொண்ட கும்பல் சுற்றி வளைத்து கூர்மையான ஆயுதங்களினால் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். இதில், பலத்த காயமடைந்த அவர் சம்பவயிடத்திலேயே பலியானார்.

இதனைத் தொடர்ந்து, சுமார் 2 மணி நேரமாக அந்த இடத்திலேயே கிடந்த அவரது உடலைக் கண்ட கிராமவாசிகள் காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர். அதன் அடிப்படையில் அங்கு விரைந்த போலீஸார் அவரது உடலை கைப்பற்றி உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து, காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த கொலையானது முன்பகையினால் நிகழ்த்தப்பட்டிருக்கும் என சந்தேகிக்கப்படுகிறது. ஆனால், குடும்பத் தகராறினால் அவரது உறவினர்கள் சிலர்தான் அவரை கொலை செய்துள்ளதாக அக்கிராமவாசிகள் சிலர் கூறி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.