
அவிநாசி: அவிநாசி அருகே துலுக்கத்தூரில் வயதான விவசாய தம்பதியர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே துலுக்கமுத்தூர் ஊஞ்சப் பாளையம் சாலை பெரிய தோட்டத்தை சேர்ந்தவர் பழனிசாமி (82). இவரது மனைவி பருவதம்(75). விவசாய குடும்பத்தை சேர்ந்த இவர்களது மகன், மகள் இருவரும் திருமணமாகி வெவ்வேறு பகுதியில் வசித்து வருகின்றனர்.
தோட்டத்து வீட்டில் வயதான தம்பதியர் மட்டும் தனியாக வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில், வியாழக்கிழமை காலை நீண்ட நேரமாகியும் வயதான தம்பதியர் வெளியே வராததால், அருகில் இருந்தவர்கள் தோட்டத்துக்குள் சென்று பார்த்தபோது தம்பதியர் அடித்துக் கொலை செய்திருப்பது தெரியவந்தது.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த அவிநாசி போலீஸார், இருவரது சடலத்தையும் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு உடல்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதியவர்கள் முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டார்களா அல்லது தங்க நகை மற்றும் பணத்திற்காக கொலை செய்யப்பட்டார்களா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வயதான விவசாய தம்பதிகள் கொலை செய்யப்பட்ட சம்பவம் அவிநாசியில் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.