
புதுச்சேரியில் மஞ்சள் நிற குடும்ப அட்டை வைத்துள்ள தகுதியான மகளிருக்கும் மாதம் ரூ.1,000 வழங்கப்படும் என புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
புதுச்சேரியில் கடந்த மார்ச் 10-ம் தேதி ஆளுநர் உரையுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. மார்ச் 12 ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் தொடர்ந்து அதுகுறித்த விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் சிகப்பு ரேஷன் அட்டை வைத்திருக்கும் மகளிருக்கான மாத உதவித்தொகை ரூ. 1,000 வழங்கப்பட்டு வந்த நிலையில் இனி ரூ. 2,500 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து அனைத்து மகளிருக்கும் உதவித்தொகை வழங்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இதையும் படிக்க | விரைவில் வீடு தேடி வரும் ரேஷன் பொருள்கள்! - அமைச்சர் சக்கரபாணி தகவல்
அதன்படி, புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் மஞ்சள் நிற குடும்ப அட்டைகள் வைத்திருக்கும் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும் ரூ. 1,000 வழங்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி இன்று(மார்ச் 19) அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாட்டைத் தொடர்ந்து புதுச்சேரி, கர்நாடகம், தெலங்கானா, மகாராஷ்டிரம், சத்தீஸ்கர், தில்லி மாநிலங்களில் பெண்களுக்கு மாதம்தோறும் உதவித்தொகை வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.