
தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு தர வேண்டிய ரூ. 2.63 லட்சம் கோடி நிலுவையில் உள்ளதாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
தமிழக பட்ஜெட் கூட்ட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், இன்று பேரவையில் யார் ஆட்சியில் அதிக கடன் என நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே காரசார விவாதம் நடைபெற்றது.
"கரோனாவால் கடன் வாங்கியதாக அதிமுகவினர் கூறுகின்றனர். ஆனால் திமுக ஆட்சிக்கு வந்தபோதும் கரோனா இருந்தது" என்று தங்கம் தென்னரசு கூறினார்.
இபிஎஸ், "எங்கள் ஆட்சியில் 10 மாதங்கள் கரோனா ஊரடங்கு போடப்பட்டிருந்தது. அரசுக்கு மது, பத்திரப்பதிவு என எந்த வருவாயும் வரவில்லை. ஆனால் நீங்கள் ஆட்சிக்கு வந்தபோது கரோனா இருந்தாலும் ஊரடங்கு இல்லை, வரி வரிவாய் இயல்பாக இருந்தது" என்றார்.
உடனே தங்கம் தென்னரசு, "நீங்கள் மத்திய அரசுடன் இணக்கமாக இருந்து நிதி வாங்கினீர்கள். நாங்கள் மத்திய அரசுடன் உரிமைப் போராட்டம் நடத்தி வருவதால் அவர்களிடம் இருந்து எங்களுக்கு நிதி வரவில்லை. எனவே அவர்களுடன் போராட்டம் நடத்துகிறோம், கடன் வாங்குகிறோம்" என்று கூறினார்.
மேலும் கடன் வாங்காமல் மாற்று வழிகளை தமிழ்நாடு அரசு தேட வேண்டும் என்று பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கூறியதற்கு பதிலளித்த தங்கம் தென்னரசு, தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய ரூ. 2.63 லட்சம் கோடியை மத்திய அரசு கொடுக்கவில்லை எனவும் இது தமிழ்நாட்டின் மீதான கடனில் 32 சதவீதம் என்றும் கூறினார்.
2020 – 21 ஆம் ஆண்டில் 3.28 % ஆக இருந்த வருவாய் பற்றாக்குறை, தற்போது 1.17 சதவீதமாக குறைந்துள்ளது என்றும் தெரிவித்தார்.
இதையும் படிக்க | விரைவில் வீடு தேடி வரும் ரேஷன் பொருள்கள்! - அமைச்சர் சக்கரபாணி தகவல்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.