பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

வீரராகவ பெருமாள் கோயில் சித்திரை பிரம்மோற்சவத்தை முன்னிட்டு நடைபெற்ற தேரோட்டம்!

திருவள்ளூர் ஸ்ரீ வீரராகவ பெருமாள்கோயிலில் சித்திரை மாத பிரம்மோற்சவத்தை முன்னிட்டு வியாழக்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்ற தேரோட்டம்

News image
வீரராகவர் பெருமாள் சித்திரை பிரம்மோற்சவத்தையொட்டி நடைபெற்ற தேரோட்ட நிகழ்வில் திரளாக பங்கேற்ற பக்தர்கள்.
Updated On :8 மே 2025, 6:13 am

DIN

திருவள்ளூர்: திருவள்ளூர் ஸ்ரீ வீரராகவ பெருமாள்கோயிலில் சித்திரை மாத பிரம்மோற்சவத்தை முன்னிட்டு வியாழக்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்ற தேரோட்ட நிகழ்வில் பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

திருவள்ளூர் ஶ்ரீ வைத்திய வீரராகவ பெருமாள் திருக்கோயில் 108 வைணவ திருத்தலங்களில் ஒன்றாக விளங்குகிறது.

இக்கோயிலில் சித்திரை பிரம்மோற்சவ விழா கடந்த 2 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து

வரும் 11-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான தேரோட்டம் வியாழக்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது.

இவ்விழாவில் 60 அடி உயரம், 21 அடி அகலம் கொண்ட திருத்தேர் வண்ண மலர்கள், வண்ண துணி மற்றும் வாழை தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு காலை 5.30 மணியளவில், தங்க, வைர ஆபரணங்கள் மற்றும் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட உற்சவர் ஸ்ரீ வைத்திய வீரராகவ பெருமாள் சமேதராய் ஸ்ரீதேவி, பூதேவியுடன் எழுந்தருளினார்.

அதைத் தொடர்ந்து காலை 7.30 மணியளவில் திருத்தேர் தேரடியிலிருந்து பக்தர்கள் கோவிந்தா முழக்கத்துடன் திருத்தேர் புறப்பாடு நடைபெற்றது. இத்தேர் குளக்கரை வீதி, வடக்கு ராஜவீதி, பஜார் வீதி, மோதிலால் தெரு என நான்கு மாட வீதிகள் வழியாக வலம் வந்து 9.30 மணியளவில் மீண்டும் தேரடியில் நிலை நிறுத்தப்பட்டது.

தங்க, வைர ஆபரணங்கள் மற்றும் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட உற்சவர் ஸ்ரீ வைத்திய வீரராகவ பெருமாள் சமேதராய் ஸ்ரீதேவி, பூதேவியுடன் எழுந்தருளினார்.

தங்க, வைர ஆபரணங்கள் மற்றும் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட உற்சவர் ஸ்ரீ வைத்திய வீரராகவ பெருமாள் சமேதராய் ஸ்ரீதேவி, பூதேவியுடன் எழுந்தருளினார்.

இதில் சென்னை திருவள்ளூர், காஞ்சிபுரம், பூந்தமல்லி, திருத்தணி, ஊத்துக்கோட்டை, ஸ்ரீபெரும்புதூர், , செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று திருத்தேர் சக்கரத்தில் உப்பு, மிளகு போட்டு, ‘கோவிந்தா... கோவிந்தா என்று பக்தி முழக்கமிட்டு தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.

விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மோர், குளிர் பானங்கள், அன்னதானம் ஆகியவற்றை வழங்கினர்.

விழா பாதுகாப்புப் பணியில் திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள் தலைமையில் துணை போலீஸ் சூப்பிரண்டு தமிழரசி, காவல் ஆய்வாளர்கள் அந்தோணி ஸ்டாலின், வெற்றிச்செல்வன் மற்றும் 100-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.