மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ் மேக்கேதாட்டு அணைக்கு எதிர்ப்பு! பேரவையில் முதல் தீர்மானத்தை முன்மொழிந்தார் முதல்வர் விஜய்!எனது அன்புச் சகோதரர்! ராகுலுக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து! சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

தமிழ்நாடு நாள்: ராமதாஸ் வாழ்த்து

தமிழ்நாடு நாளை முன்னிட்டு பாமக நிறுவனர் மற்றும் தலைவர் மருத்துவர் ச.ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

News image

பாமக நிறுவனர் ராமதாஸ் - IANS

Updated On :1 நவம்பர் 2025, 12:29 pm IST

தமிழ்நாடு நாளை முன்னிட்டு பாமக நிறுவனர் மற்றும் தலைவர் மருத்துவர் ச.ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் தெரிவித்துள்ள வாழ்த்து செய்தியில்,

தமிழ் மக்களுக்கு வாழ்த்துகள்... சுதந்திர இந்தியாவில் 69 ஆண்டுகளுக்கு முன்பு மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நாளான நவம்பர் 1 இன்றைய நாள் தமிழ்நாடு நாள் மற்றும் தமிழர் தாயகத்தின் பொன்நாளாகும்.

மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நாளான இந்த நாளை புதுச்சேரி, ஆந்திரம், கர்நாடகம், கேரளம், தெலுங்கானா போன்ற மாநிலங்கள் மிகப்பெரிய கொண்டாட்ட நாட்களாக மாநிலம் முழுவதும் கொண்டாடுகின்றன. அதேபோல் தமிழ்நாட்டிலும் தமிழ்நாடு நாள் விழா கலை, கலாசார, பண்பாட்டு பெருவிழாவாக, திருவிழாவாக கொண்டாடப்பட வேண்டும்.

உலகெங்கும் வாழ்கின்ற தமிழர்களின் தாயகமான தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், தமிழ் மண் செழிக்கவும், தமிழர்கள் இழந்த உரிமைகளை மீட்கவும் உலகத் தமிழர்கள் யாவரும் இந்நாளில் உறுதி ஏற்போம் என ராமதாஸ் கூறியுள்ளார்.

Tamil Nadu Day PMK Ramadoss wishes

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.