

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஆதரவாளரான முன்னாள் எம்.பி. வி.சத்தியபாமா உள்பட 12 பேரை நீக்கி வெள்ளிக்கிழமை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கட்சியின் கொள்கை, நோக்கம் மற்றும் ஒழுங்கு விதிமுறைகளைப் புறந்தள்ளி செயல்பட்டு வந்த அதிமுகவில் முன்னாள் எம்.பி. சத்தியபாமா உள்பட 12 பேர் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ள முன்னாள் எம்,பி. வி.சத்தியபாமா, ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட பொருளாளர் கந்தவேல் முருகன், நம்பியூர் அதிமுக ஒன்றியச் செயலாளர் சுப்பிரமணியன், கோபி மேற்கு ஒன்றிய செயலாளர் குறிஞ்சிநாதன், முன்னாள் ஒன்றிய தலைவர்கள் மௌதீஸ்வரன், பி.யூ.முத்துசாமி, அத்தாணி பேரூர் கழகச் செயலாளர் எஸ்.எஸ்.ரமேஷ் உள்ளிட்ட 12 பேருடன் கட்சியினா் யாரும் தொடா்பு வைத்துக் கொள்ளக்கூடாது என அதில் தெரிவித்துள்ளாா்.
செங்கோட்டையன் ஆதரவாளர்கள் என ஒரே நாளில் 12 பேர் நீக்கப்பட்டிருப்பது அதிமுக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.