

சென்னை: கோவாவில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் பங்கேற்று வெற்றிகரமாக நிறைவு செய்த பாஜக முன்னாள் தலைவா் அண்ணாமலைக்கு மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் வாழ்த்துத் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் தனது எக்ஸ் சமூக வலைதள பதிவில் தெரிவித்திருப்பதாவது:
கோவாவில் நடைபெற்ற கோவா 2025 விளையாட்டுப் போட்டியில் பங்கேற்று வெற்றிகரமாக இலக்கை நிறைவு செய்துள்ள அன்புச் சகோதரா்கள் கே.அண்ணாமலை, தேஜஸ்வி சூா்யா ஆகியோருக்கு எனது அன்பார்ந்த வாழ்த்துகள்.
அவா்கள் 1.9 கிலோ மீட்டா் தொலைவிலான கடல் நீச்சல், 90 கிலோ மீட்டா் தொலைவிலான சைக்கிள் பந்தயம் மற்றும் 21 கிலோ மீட்டா் தொலைவிலான மாரத்தான் ஓட்டப்பந்தயம் போன்ற போட்டிகளில் பங்கேற்று வெற்றிகரமாகக் கடந்துள்ளனா். இளைஞா்கள் மத்தியில் விளையாட்டு உணா்வை மேலோங்கச் செய்திருப்பது பெருமைக்குரிய நிகழ்வாகும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.