2026 தேர்தலில் திமுகவுக்கு எதிரணியாக பாஜக இருக்கும்: பேரவைத் தலைவர் அப்பாவு

2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் மக்களின் பேராதரவோடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மீண்டும் வரும் '2.0 முதல்வராக' வருவார் என்று நம்பிக்கை தெரிவித்த...
செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சட்டப்பேரவைத் தலைவர் மு. அப்பாவு.
செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சட்டப்பேரவைத் தலைவர் மு. அப்பாவு.
Published on
Updated on
1 min read

2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் மக்களின் பேராதரவோடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மீண்டும் வரும் '2.0 முதல்வராக' வருவார் என்று நம்பிக்கை தெரிவித்த பேரவைத் தலைவர் அப்பாவு, பாஜக எதிரணியாக இருக்கும் என்று தெரிவித்தார்.

திருநெல்வேலி பாளையங்கோட்டையில் செய்தியாளர்களுடன் பேசிய பேரவைத் தலைவர் அப்பாவு, முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் ஆட்சிக் காலம் விளையாட்டுத் துறைக்குப் பொற்காலமாக உள்ளது. ஒலிம்பிக் செஸ் போட்டி, கார் பந்தயம் போன்ற உலகளாவிய போட்டிகளைத் தமிழ் மண்ணில் நடத்தியது பெருமை என்றும், உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டி வெற்றி கோப்பை இந்தியாவுக்கு கிடைக்க வேண்டும் என்பதே தனது ஆசை என்றும் தெரிவித்தார்.

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்ததற்கு அமித் ஷாவுடன் போடப்பட்ட அரசியல் ஒப்பந்தம்தான் என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

தமிழ்நாட்டிற்கு விரோதமாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் செயல்படுவதாக விமரிசனம் செய்த அப்பாவு, சர்வ சிக்‌ஷா அபியான் திட்டத்தின் ரூ.2,000 கோடி நிலுவை, புயல் நிவாரணத்திற்காகக் கேட்கப்பட்ட ரூ.37,000 கோடியை வழங்காதது மற்றும் விளையாட்டுத் துறைக்கு குஜராத்திற்கு ரூ.663 கோடி ஒதுக்கிய நிலையில் தமிழ்நாட்டிற்கு ரூ.33 கோடி மட்டுமே ஒதுக்கியது போன்ற நிதிப் பாரபட்சங்களைக் கடுமையாகச் சுட்டிக்காட்டினார். மேலும், ஏழை மாணவர்களின் கடனைத் தள்ளுபடி செய்யாமல், குஜராத்தைச் சேர்ந்த பெருநிறுவனங்களின் ரூ.16 லட்சம் கோடி கடனைத் தள்ளுபடி செய்தது மத்திய அரசின் தவறான செயல் என்று குற்றம் சாட்டினார்.

மோடி அரசின் கருவி தேர்தல் ஆணையம்

தேர்தல் ஆணையம் நடுநிலைமை தவறிவிட்டதாகக் குற்றம் சாட்டிய அப்பாவு, தற்போது பிரதமரின் ஆணையை ஏற்று நடக்கும் ஆணையமாக மாறிவிட்டது என்றும் அதுவொரு "மோசடி ஆணையம்" என்று விமர்சித்தார்.

தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு அமைதியாகவே உள்ளது என்றும், தில்லியில் இருப்பதைப்போல் மக்கள் அச்சத்தில் இல்லை என்றும் கூறினார். தனிப்பட்ட விரோதங்களில் நடக்கும் சம்பவங்களுக்கு அரசு பொறுப்பல்ல. மேலும், சட்டப்பேரவையில் எந்த மனுவும் நிலுவையில் இல்லை என்றும், அதிமுகவின் சமீபத்திய உச்ச நீதிமன்ற மனு நிராகரிப்பு அந்தக் கட்சியின் பலவீனத்தைக் காட்டுவதாகவும் தெரிவித்தார்.

மேலும், வரும் 2026 பேரவைத் தேர்தலில் திமுகவுக்கு பாஜக எதிரணியாக இருக்கும் என்றும், மக்களின் பேராதரவால் முதல்வர் மு.க. ஸ்டாலின் மீண்டும் '2.0 முதல்வராக' வருவார் என்று அப்பாவு நம்பிக்கை தெரிவித்தார்.

Summary

BJP will be DMK's opponent in 2026 elections says Assembly Speaker Appavu

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com