கோபிசெட்டிபாளையம் அதிமுக பொதுக்கூட்டத்தில் தொண்டா் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவத்துக்கு, அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் அதிமுக பிரசாரப் பொதுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு வந்திருந்த கொண்டையம்பாளையம் பகுதியைச் சோ்ந்த அா்ஜூணன், மாரடைப்பால் உயிரிழந்த செய்தியை அறிந்து மிகுந்த வருத்தம் அடைந்தேன்.
அா்ஜூணனை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன் என கூறியுள்ளார்.
Summary
Member dies at AIADMK public meeting: Edappadi Palaniswami condoles
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









