ரகுராம் ராஜன் தந்தை காலமானார்: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர், தமிழ்நாடு அரசின் பொருளாதார ஆலோசனைக் குழு உறுப்பினர் ரகுராம் ராஜன் தந்தை ராகவாச்சாரி கோவிந்தராஜன் மறைவு
முதல்வர் மு.க. ஸ்டாலின்
முதல்வர் மு.க. ஸ்டாலின்
Published on
Updated on
1 min read

இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர், தமிழ்நாடு அரசின் பொருளாதார ஆலோசனைக் குழு உறுப்பினர் ரகுராம் ராஜன் தந்தை ராகவாச்சாரி கோவிந்தராஜன் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில்,

இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் - நமது பொருளாதார ஆலோசனைக் குழு உறுப்பினர் ரகுராம் ராஜன் தந்தையும், இந்திய உளவுத்துறையில் சிறப்பாகப் பணி ஆற்றிய அதிகாரியுமான ராகவாச்சாரி கோவிந்தராஜன் மறைந்த செய்தியறிந்து வருத்தமடைந்தேன்.

தந்தையாரை இழந்து தவிக்கும் ரகுராம் ராஜனை தொடர்புகொண்டு அவருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தேன்.

நம் நாட்டின் பாதுகாப்புக்காக, குறிப்பாக ரா உளவு அமைப்பு தோற்றுவிக்கப்பட்ட காலத்தில் இருந்து அதில் பணியாற்றிய சிறப்புக்குரிய ராகவாச்சாரி கோவிந்தராஜனின் பணிநன்றியுடன் நினைவுகூரப்படும் என்று கூறியுள்ளார்.

Summary

CM Condolence Message Raghuram Rajan Father's Death

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com