உத்தமபாளையத்தில் விடிய விடிய மழை: முல்லைப் பெரியாற்றில் வெள்ளம்!

உத்தமபாளையம் பகுதிகளில் வெள்ளிக்கிழமை மாலை முதல் விடி, விடிய பெய்த மழையால் முல்லைப் பெரியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
உத்தமபாளையத்தில் விடிய விடிய பெய்த மழைக்கு  முல்லைப் பெரியாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளம்.
உத்தமபாளையத்தில் விடிய விடிய பெய்த மழைக்கு முல்லைப் பெரியாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளம்.
Published on
Updated on
1 min read

உத்தமபாளையம்: தேனி மாவட்டம் உத்தமபாளையம், கம்பம் , சின்னமனூர், கூடலூர் என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளிக்கிழமை மாலை முதல் விடி, விடிய பெய்த மழையால் முல்லைப் பெரியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

வடகிழக்கு பருவமழை தொடங்கியதையடுத்து கம்பம் பள்ளத்தாக்குப் பகுதிகளான உத்தமபாளையம், சின்னமனூா், கம்பம், கூடலூா் உள்ளிட்ட தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இதேபோல, நீா்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் முல்லைப் பெரியாறு அணைக்கு நீா் வரத்து ஏற்பட்டது.

அவ்வப்போது கன மழை பெய்ததால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடின.

மேலும், கால்வாய்கள், ஓடைகளில் பெருகெடுத்த வெள்ள நீர் முல்லைப் பெரியாற்றுடன் இணைந்ததால் தற்போது உத்தமபாளையம் முல்லைப் பெரியாற்றில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து செல்கிறது.

அதேபோல சண்முகா நதி அணை,சுருளி அருவி பகுதிகளில் விடிய, விடிய பெய்த கன மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

உத்தமபாளையத்தில் ஆற்றின் கரையோர குடியிருப்புகளான சூரிய நாராயணபுரம், களி மேட்டுப்பட்டி, உத்தியமலை போன்ற பகுதிகளில் சுமார் 200-க்கும் அதிகமான வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்ததால் மக்கள் வீட்டை விட்டு வெளியேறி மேடான பகுதியில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

உத்தமபாளையம் தீயணைப்புத் துறை மீட்புக் குழுவினர் வெள்ளம் புகுந்த வீடுகளில் முகாமிட்டு பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த 30 ஆண்டுகளுக்குப் பிறகு முல்லைப் பெரியாற்றில் ஏற்பட்டுள்ள இந்த காட்டாற்று வெள்ளத்தை அந்த பகுதி மக்கள் அதிகயளவில் ஆற்று பாலத்திற்கு சென்று ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர்.

ஆற்று பாலத்தில் கூட்டம் அதிகமாக இருப்பதால் உத்தமபாளையம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு பாலத்தின் மீது நிற்பவர்களை அங்கிருந்து வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

உத்தமபாளையம் பேரூராட்சி தலைவர் முகமது காசிம் தலைமையில் பேரூராட்சி பணியாளர்கள் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு சென்று நிவாரணங்களை வழங்கி வருகின்றனர்.

தொடர்ந்து ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துக் கொண்டே வருவதால் மக்கள் மத்தியில் அச்சத்தையும் பீதியும் ஏற்படுத்தி உள்ளது.

Summary

Heavy rain in Uttamapalayam Flooding in Mullaperiyar

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com