
தீபாவளி பண்டிகையையொட்டி சென்னை முழுவதும் 18,000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
புத்தாடைகள் மற்றும் பட்டாசு பொருட்கள் வாங்குவதற்கு மக்கள் அதிகளவு கூடும் இடங்களான தி.நகர், வண்ணாரப்பேட்டை, புரசைவாக்கம், பூக்கடை உள்பட சென்னை பெருநகரின் பல பகுதிகளில் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தி.நகர் மற்றும் வண்ணாரப்பேட்டை பகுதியில் கூடுதலாக சிசிடிவி கேமராக்கள் பொருத்தி கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் மக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் குற்றச்சம்பவங்களில் ஈடுபடும் நபர்களைக் கண்காணிக்க சாதாரண உடையில் காவலர்கள் பணியமர்த்தப்பட்டு, குற்றவாளிகளைக் கண்காணித்து வருகின்றனர்.
தி.நகர், வண்ணாரப்பேட்டை, புரசைவாக்கம் மற்றும் பூக்கடை பகுதியில் எல்இடி திரையின் மூலம் பாதுகாப்பு வாசகங்கள் மற்றும் குற்றத்தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை வாசகங்கள் ஒளிபரப்பப்பட்டு பொதுமக்களுக்கு எச்சரிக்கை மற்றும் அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
மேலும் பட்டாசு கடைகளின் அருகில் போலீஸார் சார்பில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, அசம்பாவிதங்கள் நிகழாமல் கண்காணித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.