திமுக எம்எல்ஏ கு.பொன்னுசாமி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்

சேந்தமங்கலம் தொகுதி திமுக எம்எல்ஏ கு.பொன்னுசாமி மறைவையொட்டி, முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
திமுக எம்எல்ஏ கு.பொன்னுசாமி மறைவையொட்டி, முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
திமுக எம்எல்ஏ கு.பொன்னுசாமி மறைவையொட்டி, முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
Published on
Updated on
1 min read

சேந்தமங்கலம் தொகுதி திமுக எம்எல்ஏ கு.பொன்னுசாமி மறைவையொட்டி, முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

முதல்வர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

சேந்தமங்கலம் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினர் அருமைச் சகோதரர் கு.பொன்னுசாமி மறைந்த துயரச் செய்தியறிந்து மிகவும் வருந்தினேன்.

சேந்தமங்கலம் தொகுதி மக்களின் நன்மதிப்பை பெற்று இரண்டு முறை அவர்களது பிரதிநிதியாகச் பேரவையில் மக்கள் பணி ஆற்றிய அவரது மறைவு அந்த தொகுதி மக்களுக்கும், திமுகவிற்கும் பேரிழப்பாகும்.

கட்சியின் மீது தீவிரப் பற்றும், முத்தமிழறிஞர் கலைஞர் மீதும் - என் மீதும் பேரன்பும் கொண்டு செயலாற்றி வந்தவர், நாமக்கல் கிழக்கு மாவட்டக் கழகத் துணைச் செயலாளராகக் கழகத்தை வளர்த்ததோடு, பழங்குடியின மக்களின் முன்னேற்றத்திற்காக அயராது பாடுபட்டவர்.

அவரது மறைவிற்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது பிரிவால் வாடும் சேந்தமங்கலம் தொகுதி மக்கள், அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், பொதுவாழ்வில் அவருக்குத் துணை நின்ற திமுக உடன்பிறப்புகள் உள்ளிட்ட அனைவருக்கும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Summary

CM Condolence Msg Senthamangalam MLA Thiru. Ponnusamy Death

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com