
இந்த வாரத்தில் 2-ம் நாளாக இன்று(செவ்வாய்க்கிழமை) பங்குச்சந்தை சரிவில் வர்த்தகமாகி வருகிறது.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை
82,147.37 புள்ளிகளில் சரிவுடன் தொடங்கியது. நண்பகல் 12 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 283.83 புள்ளிகள் குறைந்து 81,876.14 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. முன்னதாக சென்செக்ஸ் 350 புள்ளிகளுக்கு மேல் குறைந்தது.
அதேபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 89.20 புள்ளிகள் குறைந்து 25,113.15 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
கடந்த வாரம் பங்குச் சந்தைகள் ஓரளவு ஏற்றத்தைச் சந்தித்த நிலையில், இந்த வாரம் தொடர்ந்து 2-ம் நாளாக இன்று சரிவில் வர்த்தகமாகி வருகிறது.
அமெரிக்காவில் எச்1பி விசா கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டிருப்பது பங்குச்சந்தையில் குறிப்பாக ஐடி பங்குகளில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
இன்றும் ஐடி பங்குகள் அதிகம் விற்கப்பட்டு வருகின்றன. அதேபோல வெளிநாட்டு முதலீட்டாளர்களும் தொடர்ந்து தங்கள் பங்குகளை விற்று வருகின்றனர்.
இன்று மும்பை பங்குச்சந்தை மிட்-கேப் பங்குகள் 0.55%, ஸ்மால்-கேப் பங்குகள் 0.52% சரிந்தன.
மொத்தமாக 1,555 பங்குகள் ஏற்றத்திலும் 2,318 பங்குகள் சரிந்தும் வர்த்தகமாகி வருகின்றன. 207 பங்குகளின் விலையில் மாற்றமில்லை.
நிஃப்டியில் மாருதி (+2.09%), ஐஷர் மோட்டார்ஸ் (+1.67%), டாடா மோட்டார்ஸ் (+1.24%), எம்&எம் (+1.11%), பஜாஜ் ஃபைனான்ஸ் (+0.74%) ஆகியவை ஏற்றமடைந்தன.
அதேநேரத்தில் அல்ட்ராடெக் சிமென்ட் (-1.82%), ஏசியன் பெயிண்ட்ஸ் (-1.28%), டைட்டன் (-1.26%), சன் பார்மா (-0.94%), டிரென்ட் (-0.93%) அதிக இழப்பைச் சந்தித்த நிறுவனங்களாகும்.
வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 25 பைசா குறைந்து ரூ. 88.53 -ஆக இருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.