சென்னை தியாகராய நகரில் பிரசாரம் செய்யவுள்ள தவெக தலைவர் விஜய், சிஐடி நகர் பகுதியில் சாலை வலம் மேற்கொண்டுள்ளார்.
தவெக பொதுச் செயலாளரும் தி. நகர் தவெக வேட்பாளருமான என். ஆனந்திற்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்.
இருபுறமும் தவெகவினர் சூழ்ந்துள்ள நிலையில், மக்களைப் பார்த்து கையெசைத்தப்படி, விஜய் சாலை வலம் மேற்கொண்டு வருகிறார்.
இதனைத் தொடர்ந்து ஆயிரம் விளக்கு, எழும்பூர் (தனி) சட்டப்பேரவை தொகுதிகளில் இன்று(ஏப். 15) விஜய் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளார்.
சென்னையில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்டு வரும் பிரசாரத்துக்கு காவல் துறை சார்பில் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
2 உதவி ஆணையர்கள், 6 ஆய்வாளர்கள், 8 உதவி ஆய்வாளர்கள் என மொத்தம் 50 காவலர்கள் துப்பாக்கி ஏந்தி 10 வாகனங்களில் விஜய்யின் வாகனத்தை பின்தொடர்ந்து பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.
Summary
TVK leader Vijay, who is set to campaign in Chennai's Thyagaraya Nagar, is currently conducting a roadshow in the CIT Nagar area.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.











