வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

கிருஷ்ணகிரி அருகே நகரப் பேருந்தை தடுத்து நிறுத்தி பிறந்த நாள் கொண்டாடியவர்கள் மீது வழக்கு

கிருஷ்ணகிரி அருகே நகரப் பேருந்தை தடுத்து நிறுத்தி பிறந்த நாள் கொண்டாடியவர்கள் மீது வேப்பனபள்ளி போலீசார் வழக்குப்பதிவு தொடர்பாக...

News image

கிருஷ்ணகிரி அருகே நகரப் பேருந்தை தடுத்து நிறுத்தி பிறந்த நாள் கொண்டாடியவர்கள்

Updated On :4 பிப்ரவரி 2026, 7:46 am

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே நகரப் பேருந்தை தடுத்து நிறுத்தி பிறந்த நாள் கொண்டாடியவர்கள் மீது வேப்பனபள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கிருஷ்ணகிரியில் இருந்து கர்நாடக - தமிழக மாநில எல்லையில் உள்ள எப்ரி கிராமத்திற்கு வியாழக்கிழமை இரவு தடம் எண் 20, அரசு நகரப் பேருந்து சென்று கொண்டிருந்தது.

நாச்சிக்குப்பம் பிரிவு சாலை அருகே சென்று கொண்டிருந்தபோது, யானைக்கால் தொட்டி கிராமத்தை சேர்ந்த சந்தோஷ்(27) என்பவர் தனது பிறந்த நாளை தனது நண்பர்களுடன் அந்தப் பேருந்தை தடுத்து நிறுத்தி, கேக் வெட்டி கொண்டாடினார்.

அப்போது, அந்த வழியாக சென்ற ஈஸ்வரராவ், பிறந்த நாள் கொண்டாடியவர்களை கண்டித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த கும்பல், ஈஸ்வர ராவை தாக்கினர்.

இதுகுறித்து ஈஸ்வர ராவ் அளித்த புகாரின் பேரில் , வேப்பனபள்ளி போலீசார், வழக்குப்பதிந்து, தலைமறைவான சந்தோஷ் மற்றும் அவரது நண்பர்களை தேடி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி அருகே அரசு பேருந்தை தடுத்து நிறுத்தி சாலையின் நடுவே கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Summary

A case has been filed against those who stopped a city bus near Krishnagiri and celebrated a birthday

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.