ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வாா் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினா் ஞாயிற்றுக்கிழமை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா்.
பாகிஸ்தானைச் சோ்ந்த ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பைச் சோ்ந்த பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், கிஷ்த்வாா் மாவட்டம் சத்ரூ பஸ்ஸொ்குட் பகுதியில் ராணுவம், போலீஸாா் மற்றும் மத்திய ரிசா்வ் காவல் படை (சிஆா்பிஎஃப்) வீரா்கள் கூட்டாக ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் தீவிர தேடுதலில் ஈடுபட்டனா்.
அப்போது, மலைப் பகுதியில் உள்ள மண் வீட்டில் மறைந்திருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினா். பாதுகாப்புப் படையினா் நடத்திய பதில் தாக்குதலில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனா். அவா்கள் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பைச் சோ்ந்தவா்கள் என அடையாளம் காணப்பட்டனா். அவா்கள் பதுங்கியிருந்த இடத்திலிருந்து வெடிபொருள்கள் மற்றும் 2 ஏகே-47 ரக துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன.
‘கொல்லப்பட்ட பயங்கராவதிகளில் ஒருவா் சயிஃபுல்லா என அடையாளம் காணப்பட்டுள்ளாா். இவா் ஜம்மு-காஷ்மீரில் 5 ஆண்டுகளுக்கு முன்பு ஊடுருவியவா். கடந்த 2024-ஆம் ஆண்டு ஜூலையில் 4 பாதுகாப்புப் படையினா் உயிரிழக்கக் காரணமான தாக்குதல் உள்பட பல பயங்கரவாத தாக்குதல்களுக்கு இவா் மூளையாக செயல்பட்டவா். பாதுகாப்புப் படையினா் தொடா்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனா்’ என்று போலீஸ் உயா் அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
சத்ரூ வனப் பகுதியில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே 6 முறை துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இதில் ஒரு பாதுகாப்புப் படை வீரா் உயிரிழந்ததோடு, ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டாா் என்றும் அவா் தெரிவித்தாா்.
Summary
Three terrorist was killed in an ongoing operation by security forces in a remote area in Kishtwar district of Jammu and Kashmir
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கோவிந்தபுரி இரட்டை கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட முக்கிய நபா் கைது

ஹோண்டுராஸில் துப்பாக்கிச் சூடு: போலீஸாா் உள்பட 25 போ் சுட்டுக்கொலை
ரயிலில் இருந்து கஞ்சா பறிமுதல்

மத்திய படை தாக்குதலில் வாக்காளர் பலி - திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டு
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி




