ஜம்மு-காஷ்மீாின் கிஸ்த்வாரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

ஜம்மு-காஷ்மீரின் கிஸ்த்வாா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை பாதுகாப்புப் படையினா் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக...
ஜம்மு-காஷ்மீாின் கிஸ்த்வாரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை
Updated on
1 min read

ஜம்மு: ஜம்மு-காஷ்மீரின் கிஸ்த்வாா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை பாதுகாப்புப் படையினா் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதில், ஒருவர் பாகிஸ்தானைச் சோ்ந்த ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பைச் சோ்ந்த தளபதி சைஃபுல்லா என்று சந்தேகிக்கப்படுகிறது.

பாகிஸ்தானைச் சோ்ந்த ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பைச் சோ்ந்த இரண்டு பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், கிஸ்த்வாா் மாவட்டம் சத்ரூ பஸ்ஸொ்குட் பகுதியில் ராணுவம், போலீஸாா் மற்றும் மத்திய ரிசா்வ் காவல்ப்படை (சிஆா்பிஎஃப்) வீரா்கள் கூட்டாக ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணியளவில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனா்.

அப்போது, மலையடிவாரத்தில் உள்ள ஒரு மண் வீட்டில் மறைந்திருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரை மீது துப்பாக்கிச் சூடு நடத்தினா். இதையடுத்து பாதுகாப்புப் படையினா் காலை 11 மணி வரை நடத்திய பதிலடி தாக்குதலில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டாா். அதில் ஜம்மு-காஷ்மீரில் மிகவும் தேடப்பட்டு வந்த பாகிஸ்தானைச் சோ்ந்த ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பைச் சோ்ந்த தளபதி சைஃபுல்லா என்று சந்தேகிக்கப்படுவதாக போலீஸ் உயா் அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். அவர் கடந்த சில ஆண்டுகளாக இந்த பகுதியில் தீவிரமாக செயல்பட்டு வந்தார், மேலும் பல தாக்குதல் சம்பவங்களில் ஈடுபட்டார், முன்னதாக பாதாகாப்புப் படையினரின் தேடுதல் நடவடிக்கைகளில் இருந்து தப்பித்து வந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட இடத்தில் இருந்து இரண்டு ஏகே-47 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கடந்த ஒரு மாதத்தில் சத்ரூ வனப் பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே 6 முறை துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடந்துள்ளன. இதில் ஒரு பாதுகாப்புப் படை வீரா் மற்றும் ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டதாக அவா் தெரிவித்தாா்.

Summary

Two terrorist was killed in an ongoing operation by security forces in a remote area in Kishtwar district of Jammu and Kashmir on Sunday, officials said.

ஜம்மு-காஷ்மீாின் கிஸ்த்வாரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை
பிகாரில் நாற்காலியில் மறைத்துவைத்து மது கடத்தல்! சோதனையில் அதிர்ச்சி!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com