

விராட் கோலி தனது சிறுவயது தோற்றத்தினை ஒத்த தனது ரசிகையைச் சந்தித்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
விராட் கோலி அடுத்ததாக நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் நாளை (ஜன.11) விளையாட இருக்கிறார்.
இந்தியாவின் முன்னாள் கேப்டனும் நட்சத்திர வீரருமான விராட் கோலி டெஸ்ட், டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.
தற்போது, ஒருநாள் கிரிக்கெட்டிலும் ஐபிஎல் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார்.
விராட் கோலி 308 ஒருநாள் போட்டிகளில் 14,557 ரன்கள் குவித்துள்ளார். இதில் 53 சதம், 76 அரைசதங்கள் அடங்கும்.
இந்நிலையில், சமூக வலைதளங்களில் தனது சிறுவயது முகத்தினைப் போலவே இருக்கும் சிறுமியை விராட் கோலி சந்தித்தார்.
இந்தப் புகைப்படங்கள், விடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன.
இன்ஸ்டாவில் நிகிதா (@oyeenikita) என்றப் பெயரில் இருக்கும் இவர்தான் மினி கோலி என்றும் வாமிகா கோலி என்றும் ரசிகர்களால் அழைக்கப்பட்டு வருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.