

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாட நட்சத்திர வீரர்களான ரோஹித் - கோலி இருவரும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
டி20, டெஸ்ட் போட்டிகளில் ஓய்வு பெற்ற ரோஹித் - கோலி ஒருநாள் போட்டிகளில் மட்டுமே இந்தியாவுக்காக விளையாடி வருகிறார்கள்.
ரோ - கோ கம்பேக்
நியூசிலாந்து அணி இந்தியாவுக்குச் சுற்றுப் பயணம் செய்து 3 ஒருநாள், 5 டி20 போட்டிகள் விளையாட இருக்கின்றது.
நாளை (ஜன.11) முதலாவது ஒருநாள் போட்டி வதோராவில் நடைபெற இருக்கிறது. இந்தப் போட்டிக்கான பயிற்சியை இந்திய வீரர்கள் தொடங்கி இருக்கிறார்கள்.
விராட் கோலி 308 ஒருநாள் போட்டிகளில் 14,557 ரன்கள் குவித்துள்ளார். இதில் 53 சதம், 76 அரைசதங்கள் அடங்கும்.
ரோஹித் சர்மா 279 போட்டிகளில் 11,516 ரன்கள் குவித்துள்ளார். இதில் 3 இரட்டைச் சதங்கள், 33 சதங்கள், 61 அரைசதங்கள் அடங்கும்.
இந்தியா - நியூசிலாந்து ரிவால்வரி
2019 உலகக் கோப்பை அரையிறுதியில் நியூசிலாந்திடம் இந்திய அணி தோற்றது. தோனி அத்துடன் ஓய்வு பெற்றார்.
2023 உலகக் கோப்பையில் அரையிறுதியில் நியூசிலாந்தை வென்றாலும் இறுதிப் போட்டியில் ஆஸி. யிடம் தோற்றது.
2027 உலகக் கோப்பையில் கோப்பை வெல்லும் முனைப்பில் ரோஹித் - கோலி இருக்கிறார்கள்.
2019 உலகக் கோப்பை மட்டுமல்லாமல் கடந்தாண்டு டெஸ்ட்டில் அடைந்த தோல்வியையும் யாருமே மறக்க முடியாது. அதற்காக இந்தமுறை 3-0 என நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்யுமா இந்திய அணி என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.